மேலும் அறிய
Advertisement
மதுரையில் கல்லூரி வாசலில் வாலிபர்கள் அராஜகம் - தட்டிக்கேட்ட மாணவியின் தந்தை மீது தாக்குதல்
6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் செல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மதுரை மீனாட்சி அரசு கலை கல்லூரி சாலையில் நேற்று மாலை இராஜாஜி அரசு மருத்துவமனையிலிருந்து அமரர் ஊர்தி ஒன்று சென்றபோது ஊர்தியின் முன்பாக இளைஞர்கள் சிலர் மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஒலி எழுப்பியவாறு அதிவேகத்தில் , ஆபாசமான வார்த்தைகளை கூச்சலிட்டபடி சென்றுள்ளனர். இதனை கண்ட கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இளைஞர்களின் செயலால் அச்சமடைந்தனர். இந்நிலையில் கல்லூரி வாயில் முன்பாக நின்றுகொண்டு இளைஞர்கள் கூச்சலிட்டபோது கல்லூரி வாசல் முன்பாக நின்றுகொண்டிருந்த மாணவி ஒருவரின் தந்தை காலேஜ்கிட்ட ஏன் இப்படி பண்றீங்க மாணவிகள் பயப்படுறாங்க என கூறியுள்ளார்.
#மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட அச்சம்பத்து பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி, சோமசுந்தரம், சிவஞானம்,நாகப்பிரியன், சதீஸ்குமார், அஜித்குமார் ஆகிய 6பேர் கைது -
— arunchinna (@arunreporter92) November 5, 2022
6பிரிவுகளின் கீழ் செல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது.@SRajaJourno pic.twitter.com/gQk5zsgitq
இதனால் ஆத்திரமடைந்த அந்த மதுபோதை கும்பல் மாணவியின் தந்தையை தாக்கியதோடு, கல்லூரி வளாகத்திற்கு சென்று அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையின் மையமான கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் மதுபோதையில் பட்ட பகலி்ல் இளைஞர்கள் செய்த இந்த அராஜக செயல் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கியுள்ளது.
மதுரையில் தேவர் ஜெயந்தி விழாவின்போது தல்லாகுளம் பகுதியில் இருக்கக்கூடிய தனியார் பெண்கள் கல்லூரிக்குள் இருசக்கர வாகனத்தில் அத்துமீறி நுழைந்து பாதுகாவலரை தாக்கி ரகளை ஈடுபட்ட ஒன்பது பேர் கைது.
— arunchinna (@arunreporter92) November 5, 2022
தற்போது மீனாட்சி கல்லூரி வெளியே ரகளையில் ஈடுபட்ட 6 பேர் கைது.@Mdu_CityPolice pic.twitter.com/5Da2dkINi7
இதேபோன்று தேவர் ஜெயந்தியன்று மதுரை நரிமேடு பகுதியில் உள்ள மகளிர் கல்லூரியில் மாணவர்கள் சிலர் ரகளையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. மகளிர் கல்லூரிகளுக்குள் புகுந்து தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டு வரும் சம்பவம் தொடர்கதையாகியுள்ளது மதுரை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ குறித்து செல்லூர் காவல் ஆய்வாளர் ஆறுமுகத்திடம் கேட்ட போது வீடியோ பதிவுகளை கொண்டு சம்மந்தப்பட்ட இளைஞர்களை தேடி வருவதாகவும், விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் கோரிப்பாளையம் பகுதியில் கல்லூரி வாசலில் ரகளை- ஆறு வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட அச்சம்பத்து பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி, சோமசுந்தரம், சிவஞானம்,நாகப்பிரியன், சதீஸ் கு மார், அஜித்குமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் செல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion