மேலும் அறிய

சாத்தான்குளம் கொலை வழக்கு.. குற்றவாளிகள் 9 பேரும் சிறையிலிருந்த படி, காணொளியில் ஆஜர் !

தமிழக அரசு மற்றும் CBI தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வர உள்ளது. நீதிபதிகள்  ஆனந்த் வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் அமர்வு உத்தரவு.

நீதிபதிகள், உத்தரவு நகலை வைத்து மேல்முறையீட்டு மனு முதலில் தாக்கல் செய்யுங்கள். பிறகு உரிய ஆவணங்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு
 
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஜெயராஜும் அவரது மகன் பென்னிக்ஸும் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி கொரோனா காலகட்டத்தில் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டனர். இதற்குப் பிறகு இவர்கள் இருவரும் 21-ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜூன் 22-ஆம் தேதி இரவு ஒன்பது மணியளவில் பென்னிக்ஸ் உயிரிழந்தார். அவரது தந்தை ஜெயராஜ் அடுத்த நாள் அதிகாலையில் உயிரிழந்தார். இந்த விவகாரம் மிகப் பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்குப் பிறகு, இந்த விவகாரத்தைத் தானாகக் கையில் எடுத்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை, இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டது.
 
ஏப்ரல் 6ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
 
இதற்குப் பிறகு இந்த வழக்கு மத்தியப் புலனாய்வுத் துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபராக சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் இடம்பெற்றார். மேலும், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து, பால்துரை ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இவர்கள் பத்துப் பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், பால்துரை 2020, ஆகஸ்ட் மாதமே கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். இந்த நிலையில், இந்த வழக்கில் விசாரணைகள் முடிவடைந்து வழக்கின் தீர்ப்பு மார்ச் 23-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார். இவர்களுக்கான தண்டனை விவரங்கள் ஏப்ரல் 6ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
 
9  பேரும் மேல் முறையீட்டு மனு  தாக்கல்
 
சாத்தான்குளம் தந்தை மகன்  கொலை வழக்கில், ஒன்பது பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கிய மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதிப்படுத்தக் கோரிய  மனு மீதான விசாரணையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், SI க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் 9  பேரும் மேல் முறையீட்டு மனு  தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு. தமிழக அரசு மற்றும் CBI தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வர உள்ளது. நீதிபதிகள்  ஆனந்த் வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் அமர்வு உத்தரவு.
 
காணோலி வாயிலாக ஆஜராகினர்.
 
ஒன்பது பேரும் சிறையில் இருந்தவாரே, காணோலி வாயிலாக ஆஜராகினர். அப்போது நீதிபதிகள்,  உங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்யக்கோரி சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது. மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை ஒத்தி வைப்பு எங்களுக்கு உரிய ஆவணங்கள் வழங்கவில்லை என ஸ்ரீதர், நீதிபதியிடம் முறையிட்டார். நீதிபதிகள், உத்தரவு நகலை வைத்து மேல்முறையீட்டு மனு முதலில் தாக்கல் செய்யுங்கள். பிறகு உரிய ஆவணங்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்

Advertisement

தலைப்பு செய்திகள்

இன்றைய முக்கியச் செய்திகள்: தமிழ்நாட்டை உலுக்கும் சம்பவங்கள் - மாவட்ட வாரியாக இதோ..
இன்றைய முக்கியச் செய்திகள்: தமிழ்நாட்டை உலுக்கும் சம்பவங்கள் - மாவட்ட வாரியாக இதோ..
"என் உயிருக்கு ஆபத்து... காப்பாற்றுங்கள்"– எஸ்பி அலுவலகத்தில் கதறி அழுத மனைவி! பரபரப்பு பின்னணி!
" கதவைத் திறந்து பார்த்த பேரனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி " மாயமான நகைகள் ?
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
Tuticorin Prisoner: தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” - காவல்துறை விளக்கம்
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
காலை உணவுத் திட்டத்துக்கு எஸ்டி திட்ட நிதியா? வெளியான அதிர்ச்சித் தகவல்; உடனே மாற்ற கோரிக்கை!
காலை உணவுத் திட்டத்துக்கு எஸ்டி திட்ட நிதியா? வெளியான அதிர்ச்சித் தகவல்; உடனே மாற்ற கோரிக்கை!
IND vs ZIM: வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா? ஜிம்பாப்வேயுடன் தொடங்கியது டி20 யுத்தம்! கலக்கல் பவுலிங்!
IND vs ZIM: வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா? ஜிம்பாப்வேயுடன் தொடங்கியது டி20 யுத்தம்! கலக்கல் பவுலிங்!
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
Embed widget