மேலும் அறிய
(Source: Poll of Polls)
மதுரை வரதட்சணை வழக்கு ; காவலர் பூபாலன் மற்றும் அவரது தந்தை போக்குவரத்து ஆய்வாளரும் பணியிடை நீக்கம் !
இளம் பெண்ணிடம் வரதட்சணை கொடுமையில் ஈடுபட்ட தந்தை, மகன் எனக் காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள். வரிசையாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது காவல்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தை மகன் பணியிடை நீக்கம்
Source : whats app
மதுரை வரதட்சணை வழக்கு: தலைமறைவாக உள்ள காவலர் பூபாலன் சற்று முன்னர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது அவரது தந்தை அதாவது தங்கப்பிரியாவின் மாமனார் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செந்தில்குமரனை பணியிடை நீக்கம் செய்து மதுரை சரக டிஐஜி அபினவ் குமார் உத்தரவு.
இளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை
மதுரையில் ஒரு இளம்பெண், வரதட்சணை கொடுமைக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவரது புகாரின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில், இளம்பெண்ணின் கணவர் மற்றும் அப்பன் திருப்பதி காவலராக பணியாற்றும் பூபாலன், மாமனார் மற்றும் சாத்தூரில் போக்குவரத்து ஆய்வாளராக உள்ள செந்தில்குமரன், மாமியார் விஜயா, நாத்தனார் அனிதா ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
தலைமறைவானவர்களை தேடும் தனிப்படை
இவர்கள் நால்வரும் தற்போது தலைமறைவாக உள்ளதால், மதுரை மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில், ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. பாலசுந்தரம் தலைமையில், ஆய்வாளர் சாந்தி, சார்பு ஆய்வாளர்கள் கார்த்தி மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய மூன்று தனிப்படை போலீசார், மதுரை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இவர்களைத் தேடி தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வரதட்சணை புகாரில் இளம்பெண்ணின் மாமனாரும் பணியியை நீக்கம்
இந்த நிலையில் சற்று முன்னர் வரதட்சணை கொடுமை புகாரைத் தொடர்ந்து, தலைமறைவாக உள்ள காவலர் பூபாலன் பணியிடை நீக்கம் செய்து மதுரை சரக டிஐஜி அபினவ் குமார் உத்தரவு பிறப்புத் திறந்த நிலையில், தற்போது வரதட்சணை கொடுமை வழக்கு சர்ச்சையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தங்க பிரியாவின் மாமனார் - விருதுநகர் மாவட்டம் சாத்தூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செந்தில்குமரனை பணியிடை நீக்கம் செய்து மதுரை சரக டிஐஜி அபினவ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஒரே குடும்பத்தில் அப்பா - மகன் பணியிட நீக்கம்
இந்த வழக்கில் பெண்ணின் கணவரான அப்பன் திருப்பதி காவல் நிலைய காவலர் பூபாலனை சற்று நேரத்திற்கு முன்னர் பணி இடை நீக்கம் செய்து, மதுரை சரக டிஐஜி அபிநவ் குமார் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. இளம் பெண்ணிடம் வரதட்சணை கொடுமையில் ஈடுபட்ட தந்தை மகன் எனக் காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் வரிசையாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது, காவல்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தலைமறைவாகியுள்ள அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















