மேலும் அறிய
Advertisement
மதுரையில் பெண் குழந்தையை வளர்ப்பதாக கூறி விற்க முயற்சி - 4 பெண்கள் கைது
மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தையை கடத்தி விற்பனை செய்ய முயன்ற ஐந்து பேர் மீது வழக்கு பதிவு - தாய் - மகள் கைது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை குழந்தைகள் பிரிவு அருகே நேற்று மூதாட்டி ஒருவர் கையில் குழந்தையுடன் சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது குழந்தைகள் வார்டில் சிகிச்சை பெற்ற போது குழந்தையுடைய தாயார் யார் என செவிலியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது மூதாட்டி முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினருக்கு அளித்த தகவலையடுத்து அரசு மருத்துவமனை காவல் நிலைய காவல்துறையினர் நேரில் சென்று மூதாட்டியிடம் விசாரணை நடத்திய போது மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டிச் சேர்ந்த பாண்டியம்மாள் (60) என்பது தெரியவந்துள்ளது.
அவரிடம் நடத்திய விசாரணையில் தான் அன்னமார்பட்டி பகுதியை மாலதி என்ற பெண் பிறந்து 2 நாளே ஆன பச்சிளங்குழந்தையை கொடுத்து விற்பனை செய்து கொடுத்தால் அந்த பணத்தை இருவரும் பிரித்து எடுத்துக்கொள்ளலாம் எனவும் கூறியதாகவும், இதனையடுத்து கடந்த 25ஆம் தேதியன்று ஆனையூர் பகுதியில் ஆட்டோவில் வந்து பச்சிளங்குழந்தையை கொடுத்து சென்றுள்ளார். இதனையடுத்து தானும் மகள் அழகு பாண்டியம்மாள் இருவரும் குழந்தைக்கு டப்பா பால் கொடுத்து பராமரித்துவந்த நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு வந்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து குழந்தையை கடத்தி வைத்திருந்த பாண்டியம்மாள்(60) அவரது மகள் அழகு பாண்டியம்மாள், உறவினர் சின்னப் பாண்டியம்மாள் ஆகிய 3 பேரையும் கைது செய்த அரசு மருத்துவமனை காவல்நிலைய காவல்துறையினர் உசிலம்பட்டி நடுப்பட்டி பாண்டியம்மாள், அவரது மகள் அழகு பாண்டியம்மாள், கரும்பாலை பாண்டியம்மாள், மற்றும் மாலதி, குழந்தையின் தாயார் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் குழந்தையை தாயை தவிர மற்ற 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் காவல்துறை விசாரணையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரின், கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்தார். ஒரு மகள் உள்ள நிலையில் அந்தப் பெண் திருப்பூருக்கு வேலைக்கு சென்றபோது அங்கு ஒருவருடன் நட்பு ஏற்பட்டு கர்ப்பமுற்றார். 7 மாதத்திற்கு பிறகே கர்ப்பம் தெரியவந்ததால் கருவை கலைக்க முடியவில்லை. இதைதொடர்ந்து ஊர் திரும்பிய அப்பெண், ஊராருக்கு பயந்து வீட்டிலேயே சிகிச்சை பெற்றார். அவருக்கு அன்னமார்பட்டியில் படிக்காமல் மருத்துவம் பார்க்கும் மாலதி சிகிச்சை அளித்து பிரசவம் பார்த்தார். பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தை தனக்கு வேண்டாம் என அப்பெண் கூற, தான் வளர்ப்பதாக கூறி மாலதி பொறுப்பேற்றுக்கொண்டார். தன் வீட்டில் 2 நாட்களாக குழந்தையை பராமரித்தார். இதை அறிந்த நடுப்பட்டி பாண்டியம்மாள் 60, தன் மகள் உள்ள நிலையில் பெண் குழந்தை தேவைப்படுகிறது எனக்கூறி பெற்றார். இதை அவரது மகன் ஏற்கவில்லை. இதைதொடர்ந்து தானே வளர்ப்பதாக கூறி பாண்டியம்மாள் குழந்தையுடன் மதுரை வந்ததைத் தொடர்ந்து சிக்கிக் கொண்டனர். இந்நிலையில் தான் இது தொடர்பாக 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையில் பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தப்பட்டு விற்பனை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion