மேலும் அறிய
Advertisement
மதுரையில் ரூ.10 லட்சம் கொள்ளையடித்து மூட்டையை கட்டிய உ.பி., பிரதர்ஸ்; ரயில்வே ஸ்டேஷனை தாண்டாமல் மாட்டியது எப்படி ?
மீனாட்சியம்மன் கோயில் அருகே கண்ணாடி கடையில் ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்து ரயிலில் சொந்த ஊர் செல்ல முயன்ற உத்தர பிரதேச மாநில சகோதரர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் அம்மன் சன்னதி தெரு பகுதியில் கண்ணாடி கடை ஒன்றை முருகவேல் என்பவர் நடத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியில் இவரது சகோதரரும் இதே தொழில் செய்து வருகிறார். கடந்த -18ம் தேதி இரவு எப்போதும் போல கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர். மறுநாள் 19-ம் தேதி ஞாயிறு விடுமுறை என்பதால் முருகவேல் கடைக்கு வரவில்லை.
ஆனால் முருகவேல் கடை ஷட்டர் அரைகுறையாக திறந்து கிடந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக முருகவேலுக்கு தகவல் அளித்துள்ளனர். பதறிப்போன முருகவேல் கடையை வந்து பார்த்துள்ளார். அப்போது மூலப்பொருட்கள் வாங்க வைத்திருந்த 10 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இதையடுத்து விளக்குத்துாண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து கடையின் சி.சி.டி.வி., காட்சிகள் அடிப்படையில் ஆய்வுசெய்த போது, சகோதரர் கடையில் வேலை செய்யும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஷாபாஸ் திருடியது தெரிந்தது. கடை மாடியில் சக ஊழியர்களுடன் தங்கியிருந்தவர் மாயமானார். உடனடியாக போலீசார் ரயில்வே ஸ்டேஷனிற்கு சென்றனர். அங்கு ஷாபாஸ், அவரது சகோதரர் அர்பாஸ் 18, மற்றும் 17, 15 வயது சிறுவர்கள் ரயில் மூலம் உத்திர பிரதேசம் செல்ல காத்திருந்தனர். அவர்களை கைது செய்து பணத்தை மீட்டனர்.
காவல்துறையினர் தெரிவிக்கையில், "ஷாபாஸ் பணத்தை திருடியதும், தன் சகோதரர் மூலம் மேலமாசிவீதி கடை ஒன்றில் வேலை செய்யும் 17, 15 வயது சிறுவர்களிடம் கொடுத்து பாதுகாத்துள்ளார். ஞாயிறு விடுமுறை என்பதால் கொள்ளையடித்தது தெரியாது. அதற்குள் ஊருக்கு சென்றுவிடலாம் எனக்கருதி ரயில்வே ஸ்டேஷனிற்கு 4 பேரும் கொள்ளையடித்த பின் அவசரத்தில் அரைகுறையாக ஷட்டரை ஷாபாஸ் அடைத்ததால் ஊருக்கு செல்லும் முன்பே எங்களிடம் சிக்கிக்கொண்டனர். ரூ.8 லட்சம் மீட்கப்பட்டுள்ளது. மீதித்தொகை குறித்து விசாரித்து வருகிறோம்" என தெரிவித்துள்ளனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - நிலக்கோட்டையில் முதல்முறையாக கிடா முட்டு போட்டி - ஆக்ரோஷத்துடன் மோதிக்கொண்ட கிடாக்கள்
மேலும் செய்திகள் படிக்க - Crime: திண்டுக்கல்லில் கள்ளக் காதலியின் தலையில் கல்லைப் போட்டு கொலை; தற்கொலைக்கு முயன்றவர் கைது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion