(Source: ECI/ABP News/ABP Majha)
பள்ளிக்கு படிக்க சென்ற கணவன்...மருமகளை பாலியல் வன்கொடுமை செய்த மாமனார்..!
குடும்பத்தில் உள்ள மற்ற பெண்களை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அமைதியாக இருக்குமாறு மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டினார்.
மத்தியப் பிரதேசத்தில் கணவர் பள்ளிக்கு சென்றபோது, மருமகளை மாமனார் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள மியானா காவல் நிலையத்தில் தனது கணவர் பள்ளிக்குச் சென்றபோது தனது மாமனார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுவதாகவும் மருமகள் புகார் கூறினார்.
ராஜஸ்தானை சேர்ந்த 21 வயது பெண், குணாவை சேர்ந்த 22 வயது இளைஞரை திருமணம் செய்து கொண்டார். 12 ஆம் வகுப்பு படிக்கும் பெண்ணின் கணவர், தனது மனைவியுடன் புகார் அளிக்க காவல் நிலையத்திற்குச் சென்றார்.Maanaadu Box Office: பாக்ஸ் ஆஃப் கலெக்சனில் நம்பர் 1 .. சிங்கப்பூரில் சாதனைப் படைத்த மாநாடு..
பெண்ணின் கணவர் குணா நகரில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஆவார். இவர் தினமும் தனது கிராமத்தில் இருந்து பள்ளிக்கு செல்வது வழக்கம். தனது கணவர் பள்ளிக்குச் சென்றிருந்தபோது மாமனாரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், தற்போது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டினார். தனது மாமனார் பல சட்டவிரோத ஆயுதங்களை வைத்துக்கொண்டு, குடும்ப உறுப்பினர்களை அடிக்கடி அச்சுறுத்தி வருவதாகவும் அந்த பெண் குற்றம் சாட்டினார்.
குடும்பத்தில் உள்ள மற்ற பெண்களை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அமைதியாக இருக்குமாறு மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டினார். Crypto Currency in India: க்ரிப்டோ கரன்சி தடை..அரசு சார்பில் டிஜிட்டல் கரன்சி.. மக்களவை குறிப்பில் உள்ளது என்ன?
காவல்துறையினர், முதற்கட்ட விசாரணைகளுக்குப் பிறகு, பாலியல் வன்கொடுமை வழக்கைப் பதிவுசெய்தனர். ஆனால் சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை. "புகாரின் அடிப்படையில் நாங்கள் பாலியல் வன்கொடுமை வழக்கை பதிவு செய்துள்ளோம், மற்ற குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து வருகிறோம்" என்று போலீசார் தெரிவித்தனர்.
புகார்தாரரின் தந்தை ராஜஸ்தானில் உள்ள அரசியல் கட்சியுடன் தொடர்புடையவர். பல ஆயுதங்களை வைத்திருக்கும் அவரது தந்தை, தனது மனைவிக்கு ஆதரவாக இருந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக அவரது கணவர் குற்றம் சாட்டினார். EWS Reservation | EWS இடஒதுக்கீடு - 8 லட்சம் ஆண்டு வருமான அளவை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு முடிவு..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்