மேலும் அறிய

Crime: லாரி கடத்தல் வழக்கில் லஞ்சம்: இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ உள்பட 6 போலீசார் பணிநீக்கம் - அதிரடி உத்தரவு

லாரி கடத்தல் வழக்கில் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் உட்பட 6 போலீசாரை பணிநீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் லாரி கடத்தல் வழக்கில் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் உட்பட 6 போலீசார் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காவல் ஆய்வாளர் காமராஜ், உதவி ஆய்வாளர் சேகர், குற்றப்பிரிவு தலைமை காவலர் நாசர், காவலர்கள் கார்த்திக், அறிவுச்செல்வம், ரகுராம் ஆகியோரை பணி நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

லாரி கடத்தல் வழக்கு:

ஒசூர் அருகே பாகலூரைச் சேர்ந்த முரளி என்பவரின் லாரி கடத்தப்பட்ட வழக்கில் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 2015 ஆம் ஆண்டு பெங்களூருவில் இருந்து வாகன உதிர் பாகங்களை ஏற்றிக்கொண்டு லாரி சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. நாட்றம்பள்ளி அருகே லாரி வந்து கொண்டிருந்த போது வெலக்கல்நத்தம் அருகே 6 பேர் கொண்ட கும்பல் லாரியை வழிமறித்து கடத்தி சென்றது. 

இதுகுறித்து லாரி உரிமையாளர் முரளி கொடுத்த புகாரின்பேரில் நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரன் என்பவரை கைது செய்தனர். லாரியை உடைத்து விற்று விட்டதால் அதற்கு பதில் ரூ. 12 லட்சம் தருவதாக ராஜசேகரன் ஒப்புக்கொண்டார். முதல் தவணையாக ராஜசேகரன் கொடுத்த ரூ. 7 லட்சத்தை போலீசார் கோர்ட்டில் ஒப்படைக்காமல் காவல் நிலையத்திலேயே வைத்திருந்துள்ளனர். எஞ்சிய பணத்தை கேட்டு போலீசார் வற்புறுத்தியதால் ராஜசேகரன் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். 

6 பேர் பணிநீக்கம்:

புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காவல்நிலையத்தில் சோதனை செய்தனர். அதில் அங்கு இருந்த ரூ.7லட்சத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அப்போதைய நாட்றம்பள்ளி காவல் ஆய்வாளர் காமராஜ், எஸ்.ஐ ஆகியோர் கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். லாரி கடத்தல் வழக்கு இன்னும் நடைபெற்று வரும் நிலையில் அதிரடியாக 6 போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டனர். லாரி கடத்தல் வழக்கில் இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் பணிநிக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க: 7 AM Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய சம்பவங்கள்.. இதோ காலை 7 மணி தலைப்புச் செய்திகள்..!

மேலும் படிக்க: 12 Hours Work: 12 மணி நேர வேலை மசோதாவை எதிர்த்து கிளம்பிய எதிர்ப்பு..தொழிலாளர் சங்கத்தில் போராட்டம் அறிவிப்பு!

தலைப்பு செய்திகள்

" கணவரின் காலைப் பிடித்த மனைவி " தலையணையால் அமுக்கிய கள்ளக் காதலன் —தப்பிய கணவனின் அலறல் சத்தம்
உடம்புக்கு முடியலனு ஹாஸ்பிட்டல் வந்த 16 வயது சிறுமி... செக்கப் பண்ண டாக்டர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
உடம்புக்கு முடியலனு ஹாஸ்பிட்டல் வந்த 16 வயது சிறுமி... செக்கப் பண்ண டாக்டர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
தமிழ்நாடு, ஆந்திராவை உலுக்கிய
தமிழ்நாடு, ஆந்திராவை உலுக்கிய "த்ரீ ரோஸஸ்" லேடீஸ் திருட்டுக் கும்பல்: மாறுவேடத்தில் சென்று கைது செய்த புதுச்சேரி போலீஸ்...
திருமணம் மீறிய உறவு !! கணவனை பிரிந்து கள்ளக் காதலனுடன் வாழப்போன பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
திருமணம் மீறிய உறவு !! கணவனை பிரிந்து கள்ளக் காதலனுடன் வாழப்போன பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramayana Trailer: ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில்.! பொதுமக்களுக்கு குஷி- அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவிட்ட சிஎம் விஜய்
பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில்.! பொதுமக்களுக்கு குஷி- அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவிட்ட சிஎம் விஜய்
TNEB : மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
Gold rate today : உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
Embed widget