கரூரில் மகாவீர் ஜெயந்தி விடுமுறை நாளன்று மது விற்பனை
தான்தோன்றி மலை, ராயனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியிலான லாலாபேட்டை, பழைய ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மது விற்பனை மகாவீர் ஜெயந்தி அரசு விடுமுறை நாட்களில் விற்பனை நடைபெற்று வருகிறது
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மகாவீர் ஜெயந்தி விடுமுறை மதுபான விற்பனை படுஜோராக நடைபெற்றது.
கண்டும் காணாமல் உள்ள காவல்துறையினர் பெயரளவுக்கு 97 வழக்குகள் 97 நபர்கள் கைது 1287 மதுபானம் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தொடர்ந்து மது விற்பனை இரவிலும் நடைபெற்றது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம் ரவுண்டானா, பழைய திண்டுக்கல் சாலை, தான்தோன்றி மலை, ராயனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியிலான லாலாபேட்டை, பழைய ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மது விற்பனை மகாவீர் ஜெயந்தி அரசு விடுமுறை நாட்களில் விற்பனை படுஜோராக நடைபெற்றது
இதனைக் கண்டும் காணாமல் உள்ள காவல்துறை பெயரளவுக்கு வழக்கு பதிவு
மேலும் இதுகுறித்து கரூர் மாவட்டத்தில் செய்ததாக 97 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 97 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 1287 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், லாலாபேட்டை, பழைய ஜெயங்கொண்டம் கிராமத்தில் ஒரே நபரிடமிருந்து மட்டும் 381 பாட்டில்கள் கைப்பற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் அரசு உத்தரவை மீறி சட்ட விரோதமாக மது விற்பனை செய்யும் நபர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். இந்நிலையில் சட்டவிரோதமாக மது விற்பனை பற்றி பொதுமக்கள் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலக எண் 04324 296299 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது