மக்களே உஷார்! பீட்சா நிறுவனம் பெயரை கூறி லட்சக்கணக்கில் பண மோசடி! - வெளியான அதிர்ச்சி தகவல்
குற்றம் சாட்டப்பட்ட உணவு நிறுவனம் இந்தியா மட்டுமல்லாது நேபாளம், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் பீட்சாவுக்கு முதன்மை உரிமையாளர்களைக் கொண்ட நிறுவனம் (master franchise) என்பது குறிப்பிடத்தக்கது.
உத்திர பிரதேச மாநிலம் நொய்டாவில் பீட்சா நிறுவனத்தில் பேரில் போலி வலைத்தளத்தை உருவாக்கி மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது. உ.பியில் அமைந்துள்ள நொய்டா தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தலைநகரம் என அழைக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஐடி இளைஞர்கள் , நொய்டாவில் முகாமிட்டுள்ளனர்.பரப்பரபாக இயங்கும் நொய்டாவில் , ஃபாஸ்ட் புட் கடைகளுக்கும், உணவகங்களுக்கும் பஞ்சமே இல்லை. குறிப்பாக அங்கு பீட்சா கடைகள் ஏராளம். இந்த நிலையில் பிரபல பீட்சா நிறுவனம் பேரில் போலி இணையதளம் ஒன்றை தொடங்கிய மர்ம நர்கள், போலி மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்கள் மூலம் மக்களை தொடர்புக்கொண்டு வெளிநாட்டு உரிமத்தை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு சம்பந்தப்பட்ட உணவு நிறுவனத்தை பணம் ஏமாந்த நபர்கள் முற்றுகை இட்டுள்ளனர்.
அதன் பின்னரே சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு மோசடியின் பின்னணி குறித்து தெரிய வந்ததாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட உணவு நிறுவனம் இந்தியா மட்டுமல்லாது நேபாளம், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் பீட்சாவுக்கு முதன்மை உரிமையாளர்களைக் கொண்ட நிறுவனம் (master franchise) என்பது குறிப்பிடத்தக்கது. (முதன்மை உரிமையாளர்கள் என்பவர்கள் அந்த பகுதியில் இயங்கும் கடையில் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வார்கள் . அதன்படி குறிப்பிட்ட பகுதியில் இயங்கும் கடையின் உரிமையை குறிப்பிட்ட தொகை கொடுத்து வாங்குவதன் மூலம் , அதில் கிடைக்கும் லாபத்தில் சில பகுதியை தாங்கள் எடுத்துக்கொள்வார்கள் . கிட்டத்தட்ட இரண்டாம் நிலை owners என வைத்துக்கொள்ளலாம். )
இது குறித்து அறிந்த நொய்டாவின் செக்டார் 16 இல் அமைந்துள்ள சம்பந்தப்பட்ட பீட்சா நிறுவன அதிகாரிகள் , நொய்டாவின் செக்டார் 20 காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில் தங்கள் நிறுவனத்தின் பெயரில் போலியாக இணைதளத்தை உருவாக்கி மோசடி நடைப்பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக வெளிநாட்டில் உள்ள உணவு நிறுவனத்தின் உரிமையை ( franchise) பெற்று தருவதாக கூறி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. எனவே குற்றவாளிகளை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அறிந்த காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். விரைவில் வழக்கில் தொடர்புடைய சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இது குறித்து நொய்டா காவல்துறை சைபர் மற்றும் கண்காணிப்பு பிரிவு இணைந்து விசாரணை நடத்தி வருகிறது. இப்படி பிரபல பீட்சா நிறுவனத்தின் வெளிநாட்டு உரிமத்தை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்திருப்பது நொய்டாவின் செக்டார் 16 பகுதிகளில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.