Crime: சடங்குகள் செஞ்சா சரியாகிடும்... பெண்ணை மயக்கி பாலியல் வன்கொடுமை...! ஜோதிடரின் லீலை அம்பலம்!
தனது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக குறிப்பிட்ட சடங்குகளைச் செய்வதாகக் கூறி தனது நம்பிக்கையைப் பெற்றதாக அந்தப் பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
பல்வேறு சடங்குகள் செய்வதாக கூறி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஜோதிடர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கொல்கத்தாவில் அரங்கேறியுள்ளது.
இந்தப் புகார் தொடர்பாக ஜோதிஷ் சுபாஸ் எனப்படும் அபிஜித் கோஷ் மற்றும் ஜோதிஷ் சுபாசிஷ் ஆகியோர் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டனர். தனது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக குறிப்பிட்ட சடங்குகளைச் செய்வதாகக் கூறி தனது நம்பிக்கையைப் பெற்றதாக பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் கூறியுள்ளார்.
அந்த பெண்ணின் குடும்பத்தினர் கடினமான காலத்தை கடந்து செல்வதால், ஜோதிடம் மற்றும் தாந்த்ரீகத்தை நம்பி, சுமார் 45 நாட்களுக்கு முன்பு, செய்தித்தாளில் ஒரு விளம்பரத்தைப் பார்த்து ஜோதிடரைத் தொடர்பு கொண்டனர்.
பின்னர் குடும்ப பிரச்னைகளை தீர பிர்பூம், பர்த்வான் மற்றும் டயமண்ட் ஹார்பரைச் சுற்றியுள்ள பல இடங்களுக்கு சடங்குகள் செய்கிறோம் என்ற போர்வையில் அப்பெண்ணை அழைத்து சென்றுள்ளனர். அவருக்கு ஏதோ ஒரு பானத்தை குடிக்க கொடுத்துள்ளனர். பானத்தை குடித்து இரண்டு முறை சுயநினைவை இழந்ததாக கூறிய அந்த பெண், சுயநினைவு திரும்பியபோது, தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக உணர்ந்துள்ளார். அதன்பிறகு, அப்பெண் போலீசாரிடம் புகார் கூறினார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், “ஜோதிடர் பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அவரது உடல்நிலையை மேம்படுத்த ஏதாவது செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அந்தப் பெண் அவரை நம்பி, அவருடைய வழிகாட்டுதலைப் பின்பற்றியுள்ளார். யாகத்தை ஏற்பாடு செய்வதற்கும், சில கற்களை வாங்குவதற்கும் இரண்டு முறை தோராயமாக ரூ.20,000 கொடுத்துள்ளனர்” என்று கூறினார். கொரோனா தொற்றுநோய் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு ஜோதிடர் தனது தொழிலைத் தொடங்கினார் என்றும் அந்த அதிகாரி கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் இதற்கு முன்பும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டார்களா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்