தற்கொலைக்காக துப்பாக்கி எடுத்தார்.. குண்டு பாய்ந்ததோ பெண் மீது! போலீசின் பரபர கடைசி நிமிடங்கள்!
காவல்துறை அதிகாரி சுட்டு கொண்டதை நேரில் பார்த்த நபர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள வங்கதேச துணை தூதரகத்தில் டியூட்டியில் இருந்த காவல்துறை அதிகாரி தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை : கீழடி அருங்காட்சியக பணிகள் மே 31-க்குள் நிறைவுபெறும் - அமைச்சர் எ.வ வேலு
தன்னை தானே சுடும்போது ஒரு பெண்ணின் மீது அந்த குண்டு தவறாக பாய்ந்தது. அதில், அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து திடுக்கிடும் தகவல்களை பகிர்ந்து கொண்ட கொல்கத்தா காவல்துறை தலைவர், "கொல்கத்தா காவலர் சோடுப் லெப்சா விடுமுறைக்கு சென்றிருந்தார்.
இதையும் படிக்க: நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய பிரதிநிதிகள் இல்லாத ஆளுங்கட்சியாக மாறும் பாஜக: ரிப்போர்ட் சொல்வது என்ன?
பின்னர், இன்று டியூட்டியில் சேர்ந்தார். அவருடைய துப்பாக்கியை கொண்டே அவர் சுட்டு கொண்டார். சம்பவம் நடைபெற்ற பிறகு, சம்பவ இடத்திற்கு காவல்துறை அதிகாரிகள் விரைந்து சென்றனர்.
இதையும் படிக்க: IND vs SA, 1st T20 : எனக்கு இது முன்னவே தெரியும்; அதுதான் ட்விட்ஸ்ட்! - இந்தியாவுடனான வெற்றி குறித்து வான்டர் டுசன்
ஒரு வருடத்திற்கு முன்புதான் அவர் காவல்துறையில் இணைந்தார். இதில், ஒரு பெண்ணுக்கு படுகாயம் ஏற்பட்டது. மற்றவர்களுக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. சோடுப் லெப்சா மன அழுத்தத்தில் இருந்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது" என்றார்.
#BreakingNews#Kolkata: A policeman killed a woman and then shot himself to death at Park Circus, in Calcutta on Friday. Several others injured. Read more here. https://t.co/07fiEjG9Ru#WestBengal #Kolkatapolice #Kolkata #parkcircus #localnews #westbengal #TheTelegraph
— The Telegraph (@ttindia) June 10, 2022
"இந்த சம்பவம் கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் நிகழ்ந்தது" என சம்பவத்தை நேரில் பார்த்த பாப்லு ஷேக் தெரிவித்துள்ளார்.
(மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050)
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்