மேலும் அறிய

“ஃப்ரீ ஃபயர் விளையாட செல்போன் வேணும்” - சேலத்தில் நடந்த கொடூர கொலை... பின்னணி என்ன?

பிரீ பையர் கேம் விளையாடுவதற்கு செல்போனை கேட்ட பள்ளி மாணவனை கொலை செய்துவிட்டு தறி தொழிலாளி தற்கொலை.

சேலத்தில் பிரீ பையர் கேம் விளையாடுவதற்கு செல்போனை கேட்ட சிறுவனை கொலை செய்துவிட்டு தறி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே உள்ள கோட்டைமேடு காடு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். தறி தொழில் செய்து வருகிறார். இவரது மகன் தோஷிக். கே.ஆர் தோப்பூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். மாணவன் தோஷிக் நண்பர்களுடன் சேர்ந்து பிரீ பையர் கேம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பெற்றோர் மாணவன் தோஷிக் மற்றும் அவரது நண்பர்களை கண்டித்துள்ளனர். 

என்னிடம் பேச வேண்டாம்

இந்த நிலையில், மாணவன் தோஷிக் அதே பகுதியைச் சேர்ந்த தறி தொழிலாளி சிவராஜ் என்பவரிடம் பழகி வந்துள்ளார். மாணவன் தோஷிக், சிவராஜ் செல்போனை வாங்கி அவ்வப்போது பிரீ பையர் கேம் விளையாடுவதை வழக்கமாக வைத்து வந்துள்ளார். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு தோஷிக் மற்றும் சிவராஜ் உடைய செல்போன் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. செல்போன் தர மாட்டேன், செல்போனில் கேம் விளையாடுவதால் அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டியதாக உள்ளது. இதனால் இனி என்னிடம் பேச வேண்டாம் என்று சிவராஜ் கூறியுள்ளார். இதனால் சிறிது நாட்கள் இருவரும் பேசாமல் இருந்து வந்துள்ளனர். இனிமேல் செல்போனை கேட்க மாட்டேன் என மாணவன் தோஷிக் கூறியதை தொடர்ந்து, இருவரும் பழையபடி நெருங்கி பழகி வந்துள்ளன. 

கோபத்தில் கொலை

இந்த நிலையில், நேற்று இரவு 9 மணி அளவில் மாணவன் தோஷிக் மற்றும் சிவராஜ் இருவரும் வெளியே சென்றுள்ளனர். தற்போது சிவராஜ் செல்போனை தோஷிக் விளையாட கேட்டதாக கூறப்படுகிறது. "ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்? நீ செய்வது தவறு பெற்றோரிடம் கூறிவிடுவேன்” என கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த மாணவன் தோஷிக் சிவராஜை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த சிவராஜ் தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த தறி தொழில்நுட்ப பயன்படுத்தப்படும் நைலான் கயிறை எடுத்து மாணவன் தோஷிக் கழுத்தை நெறித்து கொன்றதாக கூறப்படுகிறது. 

பயத்தில் தற்கொலை

மாணவன் தோஷிக் இறந்ததால் தன்னை காவல்துறையினர் கைது செய்து விடுவார்கள் என பயந்த சிவராஜ், அருகில் உள்ள சுடுகாட்டுக்கு சென்று அதே கயிறை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மாணவன் தோஷிக் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் பெற்றோர் மகுடஞ்சாவடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இந்த நிலையில் இன்று காலை தோஷிக் வீட்டில் அருகில் உள்ள தோட்டத்தில் தோஷிக் உடல் சடலமாக இருப்பதைக் கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தோஷிக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதேபோல், சிவராஜன் அருகில் உள்ள சுடுகாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்ததன் பேரில் அங்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, செல்போனுக்காகதான் கொலை நடந்ததா, வேறு ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் சிவராஜ் தனது சகோதரிக்கு போன் செய்து, எனக்கு வாழ்வதற்கு விருப்பமில்லை. நான் உயிரோடு இருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். சேலத்தில் ஒரே ஊரைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)

Advertisement

தலைப்பு செய்திகள்

DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
IND vs WI: மீண்டும் சேஸிங் முடிவை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்..! அனல் பறக்க ஆடும் அபிஷேக் - இஷன்!
IND vs WI: மீண்டும் சேஸிங் முடிவை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்..! அனல் பறக்க ஆடும் அபிஷேக் - இஷன்!
Embed widget