மேலும் அறிய

Sayan, Kodanad Case: சயன் மொபைல் போன் மாயம்: அபகரிக்கப்பட்டதா... அமுக்கப்பட்டதா? போலீசாரிடம் வாக்குவாதம்!

சயன் செல்போன் எங்கே போனது? யார் எடுத்தது? என்கிற புதிய சர்சை எழுந்துள்ளது. ஆதாரங்களை மறைக்க எடுக்கப்பட்டதா, அல்லது விலை உயர்ந்த போன் என்பதால் அபகரிக்கப்பட்டதா என சந்தேகம் எழுந்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இரவில் ஆயுதங்களுடன் ஸ்டேட்டுக்குள்  அத்துமீறி நுழைந்த கும்பல், பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றது. இது தொடர்பாக சயன், சதீசன் , உதயகுமார் , சம்சிர் அலி, தீபு ,சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ்  உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கோடநாடு வழக்கில் தொடர்புடைய 5 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். குறிப்பாக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அதேபோல கோடநாடு எஸ்டேட்டில் கம்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றிய தினேஷ்குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். கனகராஜின் நண்பரும், முக்கிய குற்றவாளியான சயன் கேரள மாநிலம் பாலக்காடு அருகே குடும்பத்துடன் செல்லும் போது கார் விபத்தில் சிக்கினார். அதில் சயனின் மனைவி மற்றும் மகள் இருவரும் உயிரிழந்தனர்.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பு இருப்பதாக முக்கிய குற்றவாளியான சயன் மற்றும் விபத்தில் உயிரிழந்த கனகராஜின் அண்ணன் தனபால் ஆகியோர்  கூறியிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் கூடுதல் விசாரணை தேவையுள்ளது என நீதிமன்றத்தில் தெரிவித்த நீலகிரி காவல் துறையினர், சயானை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. இதையடுத்து கடந்த 17 ம் தேதி ஆஜரான சயனிடம் 3 மணி நேரம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து கடந்த 24 ம் தேதி விபத்தில் உயிரிழந்த கனகராஜ் அண்ணன் தனபாலிடம் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். இதனால் வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் கோடநாடு வழக்கு விசாரணை இன்று உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. சயன், தனபால் ஆகியோரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணைக்கு பின் நடைபெறும், முதல் நீதிமன்ற விசாரணை என்பதால் புதிய திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. சயன் காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூலம் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்படும், கூடுதல் நபர்களிடம் விசாரணை நடத்த அனுமதி கோரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு முதல் நபராக சயான் நீதிமன்றத்திற்குவந்தார். சயான் நீதிமன்றத்திற்குள் நுழையும் முன்பாக, நீதிமன்ற வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் வழிபட்டு சென்றார். இதையடுத்து அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர்களான ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்தனர். இதையடுத்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது.


Sayan, Kodanad Case: சயன் மொபைல் போன் மாயம்: அபகரிக்கப்பட்டதா... அமுக்கப்பட்டதா? போலீசாரிடம் வாக்குவாதம்!

விசாரணையின் போது அனுபப் ரவி என்ற சாட்சி தரப்பு வழக்கறிஞர் அனந்த கிருஷ்ணன் கூடுதல் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டுமென உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அந்த வழக்கு நிலுவையில் உள்ள போது, விசாரணை நடைபெறக்கூடாது என வாதாடினார். அப்போது குற்றவாளிகல் தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் வழக்கிற்கு சம்மந்தமே இல்லாதவர்கள் இங்கு வாதம் செய்யக்கூடாது எனத் தெரிவித்தனர்.  இதனால் வழக்கறிஞர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது அதிமுக தரப்பு வழக்கறிஞர்கள் ரவுடிகள் போல பேசக்கூடாது எனக் கூறியதால், வாதம் முற்றியது. இதையடுத்து நீதிபதி சஞ்சய் பாபா குறுக்கீட்டு, வெளியில் பேசுவது  போல நீதிமன்றத்தில் பேசக்கூடாது. நீதிமன்றத்திற்கு ஒரு மாண்பு உள்ளது எனக்கூறி இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். கூடுதல் விசாரணைக்கு தடை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டுமென அரசு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். இதனை ஏற்று வழக்கின் மீதான விசாரணை செப்டம்பர் 2 ம் தேதி நீதிபதி சஞ்சய் பாபா ஒத்திவைத்தார்.

இந்நிலையில் வழக்கு விசாரணை முடிந்த பின் வெளியே வந்த சயன், அங்கிருந்த டிஎஸ்பி.,யிடம் விசாரணையின் போது தன்னிடம் இருந்த பெறப்பட்ட ஐபோன் உள்ளிட்ட 3 போன்களை தருமாறு கேட்டார். ஆனால் போலீசார் அதற்கு ஒருவரை ஒருவர் பார்த்தனர். போன் யாரிடம் இருந்தது என்பதும் அவர்களுக்கு தெரியவில்லை. இதை கண்டு எரிச்சலான சயன், ‛எனது போனை கொடுங்கள்..’ கடுப்பானார். ‛நீதிமன்றத்திலும் அதை ஆஜர்படுத்தவில்லை... என்னிடமும் தரவில்லை... வேறு எங்கு தான் வைத்திருக்கிறீர்கள்,’ என அவர் கேட்க, போலீசார் பதில் சொல்ல முடியாமல் நின்றனர். ஒரு கட்டத்தில் செல்போன் கோரிக்கை, தகராறு போல மாறியது. தனது போனை தன்னிடம் ஒப்படைக்காமல் யார் வைத்திருப்பது என்று தொடர்ந்து சயல் சத்தம் எழுப்பினார். துவக்கத்தில் விசாரணையின் போது சயனின் செல் போனில் நிறைய தகவல்கள் கிடைத்ததாக அப்போது கூறப்பட்டது. முக்கிய ஆதாரங்களும் அதில் கிடைத்ததாக கூறப்பட்டது. ஆனால் இன்று வரை அந்த போன் ஒப்படைக்கப்படவில்லை. சயன் செல்போன் எங்கே போனது? யார் எடுத்தது? என்கிற புதிய சர்சை தற்போது எழுந்துள்ளது. ஆதாரங்களை மறைக்க அவை எடுக்கப்பட்டதா, அல்லது விலை உயர்ந்த போன் என்பதால் அவை அபகரிக்கப்பட்டதா என்பன உள்ளிட்ட பலசந்தேகங்கள் எழுகிறது. 

 

தலைப்பு செய்திகள்

தேனி: சொத்து தகராறில் மகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை 3 ஆண்டுகளுக்குப் பின் கைது!
தேனி: சொத்து தகராறில் மகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை 3 ஆண்டுகளுக்குப் பின் கைது!
5 சிலைகள்... 800 ஆண்டுக்கால ரகசியம்! காரைக்கால் போலீசாரின் அசாத்திய ஆபரேஷன்; டி.ஐ.ஜி சத்யா சுந்தரம் வியப்பு!
5 சிலைகள்...800 ஆண்டுக்கால ரகசியம்! காரைக்கால் போலீசாரின் அசாத்திய ஆபரேஷன்; டி.ஐ.ஜி சத்யா சுந்தரம் வியப்பு!
மகளிடம் அத்துமீறிய போதை ஆசாமியை நடுத்தெருவில் வச்சு வெளுத்த தாய்
மகளிடம் அத்துமீறிய போதை ஆசாமியை நடுத்தெருவில் வச்சு வெளுத்த தாய்
கள்ளக் காதலுடன் பிறந்த 9 மணி நேர சிசுவை கொன்று ஏரியில் வீசிய தாய்
கள்ளக் காதலுடன் பிறந்த 9 மணி நேர சிசுவை கொன்று ஏரியில் வீசிய தாய்

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Mojtaba Threatening Statement: 'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
US Iran War: ‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
Embed widget