கழுத்தறுத்து மனைவியை கொன்ற கார்த்திக்... கையெழுத்திடும் போது கைவிலங்கோடு ‛எஸ்கேப்’!
ஓசூர் அருகே செல்போனில் பேசிய மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கார்த்திக் என்பவர், சிறைச்சாலைக்கு அழைத்து சென்றபோது கை விலங்குடன் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட் டம் தேன்கனிக்கோட்டை அடுத்த ரங்கசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் வயது (38). இவர் ஓசூரில் உள்ள ரப்பர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ரூபா வயது (31). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் ரூபா அடிக்கடி செல்போனில் பேசிவந்ததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பின்னர் சென்ற வாரம் வீட்டிற்கு வந்த கார்த்தி, ரூபா செல்போனில் பேசும் போது கையும் களவுமாக பிடித்தார் .இதனால் ரூபாவிடம் ஏற்பட்ட தகராறால் ரூபா கோபித்து கொண்டு இரண்டு குழந்தைகளுடன் தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.
அதனைத்தொடர்ந்து, சென்ற புதன்கிழமை கார்த்திக் மனைவியை அழைப்பதற்காக அவரது மாமியார் வீடான குஞ்சிகர் பாளையத்திற்கு சென்றார். அப்போது இரவு நேரம் என்பதால் அங்கேயே தங்கி விட்டார். நேற்று முன்தினம் காலை குழந்தைகளை மாமியாருடன் வயலுக்கு அனுப்பிவிட்டு மனைவிடம் நீ என்னுடன் வந்துவிடு இதற்கு மேல் சந்தேகம் படமாட்டேன் என கூறியுள்ளார். வீட்டிற்கு வர மருத்த ரூபாவிடம் மீண்டும் தகராறில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த கார்த்திக் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி ரூபா கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் அங்கு இருந்து கார்த்திக் தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த துணைகாவல்கண்காணிப்பாளர் சங்கீதா மற்றும் தேன்கனிக்கோட்டை காவல்நிலைய ஆய்வாளர் சுப்ரமணியன் தலைமையிலான காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் ரூபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். தப்பியோடிய கார்த்திகை தேடிவந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அவர் தேன்கனிக்கோட்டை காவல்நிலையத்தில் சரணடைந்தார், மேலும் கார்த்திக்கை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் அவரை நேற்று தேன்கனிக் கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் அவரை தர்மபுரி கிளைச்சிறையில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து காவல்துறையினர் நேற்று மாலை தர்மபுரிக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது கிளைச்சிறை வாசலில் வாகனத்தை நிறத்திவிட்டு காவல்துறையினர் கார்த்திக்கை அழைத்துச்சென்று நுழை வாயிலில் உள்ள பதி வேட்டை பதிவு செய்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென கார்த்திக், காவலர்களை கீழே தள்ளிவிட்டு, அங்கிருந்து கைவிலங்குடன் தப்பியோடிவிட்டார். அதிர்ச்சியடைந்த காவலர்கள், கார்த்திக்கை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இளங்கோவன் வீட்டு ரெய்டில் சிக்கியது என்ன? நள்ளிரவு வரை நடந்தது இது தான்!