Kerala Model Death: கேரளா மாடல் அழகிகள் விபத்தில் திருப்பம்: போதை கும்பலுக்கு தொடர்பு!
ஆன்ஷி கபீர், அஞ்சனா ஷாஜனு சென்ற காரைப் பின்தொடர்ந்த ஆடி சொகுசு கார் வாகனத்தின் டிரைவர் போதைப் பொருள் கடத்தல் கும்பலிடம் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது
கேரளாவில் கார் விபத்தில் மரணமடைந்த இரண்டு பெண்கள் (அழகிப் போட்டியில் வென்றவர்கள்) வழக்கில் மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆன்ஷி கபீர், அஞ்சனா ஷாஜனு என்ற இரண்டு மாடல் அழகிகள் சென்ற காரைப் பின்தொடர்ந்த ஆடி சொகுசு கார் வாகனத்தின் டிரைவர் போதைப் பொருள் கடத்தல் கும்பலிடம் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இந்த வழக்கை குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறைக்கு மாற்றி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
விபத்து நடந்த போது நடத்தப்பட்ட விசாரணையின்படி, கார் சென்றுகொண்டிருக்கும் குறுக்கே வந்த இரு சக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க காரை வேகமாக திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் முழுவதுமாக சேதமடைந்து சம்பவ இடத்திலேயே இரண்டு பெண்களுக்கும் உயிரிழந்ததாக கூறப்பட்டது.
ஆனால் தொடர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் சென்ற வாகனத்தை, ஆடி சொகுசு கார் ஒன்று பலவந்தமாக துரத்தியதாகவும், அதிலிருந்து தப்பிக்கும் முயற்சியிலேயே இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாகவும் தற்போது அறிய வருகிறது. ஆடி சொகுசு காரை ஓட்டி வந்த சைஜு தங்கச்சன் கொச்சியில் செயல்பட்டு வரும் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் நேரடி தொடர்பில் இருந்ததை காவல்துறை கண்டறிந்துள்ளனர்.
கொச்சியில் செயல்பட்டு வரும் No 18 Hotelல் ( உயரிழந்த இரண்டு பெண்கள் கடைசியாக சென்று வந்த ஹோட்டல்), போதை மருந்து கைமாற்றப்பட்டு வருவதாக, கடந்த மே மாதமே மாநில காவல்துறை ஆணையருக்கு உளவுத்துறை அறிக்கையளித்தது. இந்த அறிக்கையில் சைஜுவின் படங்களும் இணைக்கப்பட்டிருந்தன. இருப்பினும், விடுதியின் உரிமையாலாரான ராய் சில ஐபிஎஸ் அதிகாரிகளுடன் கொண்டிருந்த நெருக்கம் காரணமாக, தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை கேரள காவல்துறை மேற்கொள்ளவில்லை என்று தெரிய வருகிறது.
விபத்துக்கு முன்னதாக No.18 விடுதியில், விஐபிகள் மட்டும் கலந்து கொள்ளும் போதை விருந்து நடைபெற்றிருக்கிறது. இதை ஏற்பாடு செய்திருந்த சைஜு, ஆன்ஷி கபீர், அஞ்சனா ஷாஜனுவை பலவந்தமாக விருந்துக்கு அழைத்துள்ளார். இந்த அழைப்பை அவர்கள் முற்றிலுமாக மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த சச்சரவுக்குப் பிறகு, இரண்டு பெண்களுகும் காரில் இருந்து அவசர அவசரமாக புறப்பட்டு சென்றிருக்கின்றனர். அவர்களை, வலுகட்டாயமாக ஆடி சொகுசு கார் ஒன்றில் சைஜு பின்தொடர்ந்துள்ளனர். ஒருகட்டத்தில் காரின் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானதாக தெரிய வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்