‘நாங்கள் பைனான்ஸில் இருந்து வருகிறோம்’ - வீட்டில் இருந்த பெண்ணிடம் நகை பறித்த கும்பல்
பின்னர் தொழிலில் நஷ்டம் அடைந்துள்ளார். இதனால் கடன் தொல்லை காரணமாக வெளியூர் சென்று பணிபுரிந்து வருகிறார்.
கரூரில் கணவர் அடகு வைத்த நகைக்காக வட்டி என்று கூறி இரவு நேரத்தில் பெண்ணிடம் ஒரு சவரன் நகைகளை ஏமாற்றி கழட்டி சென்ற கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் வையாபுரி நகர் பகுதியை சேர்ந்தவர் காமராஜ் ( வயது 35). இவர் இதே பகுதியில் உணவு விடுதி நடத்தி வந்த நிலையில், தன் நகைகள் மற்றும் மனைவி நகைகளை தனியார் கோல்டு பைனான்ஸில் அடமானம் வைத்து, பின்னர் தொழிலில் நஷ்டம் அடைந்துள்ளார். இதனால் கடன் தொல்லை காரணமாக வெளியூர் சென்று பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், தனியார் கோல்டு பைனான்ஸில் இருந்து வருவதாக கூறிக்கொண்டு ஒரு பெண்மணி மற்றும் 3 ஆண்கள் என்று 4 பேர் கொண்ட கும்பல் அவரது இல்லத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அவரது மனைவி ராசாத்தியிடம் உங்கள் கணவர் எங்களது பைனான்ஸில் நகையை அடகு வைத்து ரூ. 1 லட்சத்து 52 ஆயிரம் பணம் பெற்றுள்ளார். அதற்கு வட்டிக்கு பணம் தேவை என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அந்த பெண்மணி, வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லை, என் கணவரும் ஊரில் இல்லை நான் மதியம் அலுவலகத்திற்கு வந்து பணம் கட்டி விடுகின்றேன் என்று கூற, அந்த கும்பல் விடாமல் அந்த பெண்மணியை சமரசம் செய்து காதிலிருந்த தோடு கழட்டி வாங்கிக்கொண்டு, இது எவ்வளவு வரும் என்று அந்த பெண்மணியிடம் கேட்க, அந்த பெண்மணியோ 6 கிராம் வரும் என்று கூறியுள்ளார். அதற்கு அந்த குழு இது பத்தாது ஆகையால் கையில் அணிந்திருக்கும் மோதிரத்தினையும் கொடு, ஒரு பவுன் நகையாவது வேண்டும் என்று வலுக்கட்டாயமாக கூறி அந்த பெண்மணியிடமிருந்து பறித்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான தகவல் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்களுக்கு சொல்ல அவர்கள் கரூர் நகர போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்மணி நான் எவ்வளவோ, எடுத்து கூறியும் வலுக்கட்டாயமாக என்னிடம் இருந்து நகைகளை வாங்கி சென்று விட்டனர் என்று தெரிவித்துள்ளார்.