Crime: கடன் உதவி தருவதாக கூறி பண மோசடி; கரூரில் 3 பேர் கைது
பணக்கட்டுகளில் மேல் பகுதியில் மட்டும் ஒரிஜினல் 500 நோட்டும், அடிப்பகுதியில் வெள்ளை தாள் இருந்ததை கண்டு அதிர்ச்சி.
கடன் உதவி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட முயன்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் காரும் பறிமுதல் செய்யப்பட்டன.
கடன் உதவி தருவதாக ஏமாற்ற முயற்சி பொன்னம் சத்திரம் அருகே மூலமங்கலம் நாட்டுகல் மூன்றாவது வீதியைச் சேர்ந்தவர் வடிவேல் வயது 32, இவரை கரூர் காந்திகிராமம் மூன்றாவது கிராஸ் இந்திரா நகர் பகுதி சேர்ந்த ஜெயச்சந்திரன் 34, ராமேஸ்வரம்பட்டி புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்கின்ற சுந்தரமூர்த்தி, கரூர் வையாபுரி நகர் பகுதியில் சேர்ந்த கார் டிரைவர் பாலகிருஷ்ணன் 21 ஆகியோர் தொடர்பு கொண்டு உங்களுக்கு கடன் உதவி செய்து வருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதை தொடர்ந்து வடிவேல் கடன் பெற்றுக்கொள்ள சம்பாதித்தார். பின்னர் ஜெயச்சந்திரன் தலைமையிலான மூன்று பேரும் கரூர்- ஈரோடு செல்லும் சாலையில் உள்ள வேட்டமங்கலம் அருகே ஆசாரி பட்டறை பஸ் நிறுத்தம் அருகில் வரும்படி கூறியுள்ளனர். அப்போது மூன்று பேரும் காரில் வந்தனர், பின்னர் மூன்று பேரும் சேர்ந்து வடிவேல் இடம் கடன் பெறுவதற்கான ஆவணங்களை கொண்டு வருமாறு கேட்டுள்ளனர், வடிவேல் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார்.
போலீஸ் நிலையத்தில் புகார்
அப்போது ஜெயச்சந்திரன் உட்பட மூன்று பேர் காரில் இருந்த பேக்கை எடுத்து அதில் இருந்த பணத்தை காண்பித்து டாக்குமெண்ட் கட்டணத்தை கேட்டுள்ளனர். பணக்கட்டுகளை பார்த்த வடிவேல் அவர்கள் காட்டிய பணக்கட்டுகளில் மேல் பகுதியில் மட்டும் ஒரிஜினல் 500 நோட்டும், அடிப்பகுதியில் வெள்ளை தாள் இருந்ததை பார்த்து தான் ஏமாற்றப்படுகிறோம் என்று சந்தேகப்பட்டு தான் வீட்டிற்கு சென்று பணம் எடுத்து வருவதாக தெரிவித்துவிட்டு வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு வந்து இது குறித்து புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்கு பதிவு செய்து, போலீசார் பொன்னர் சத்திரம் பகுதிக்கு சென்றனர். அங்கு அதிவேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது காருக்குள் ஜெயச்சந்திரன், கார் டிரைவர் பாலகிருஷ்ணன் சுந்தர் என்கின்ற சுந்தரமூர்த்தி ஆகிய மூன்று பேரும் இருந்தனர், காரை நிறுத்தியதும் சுந்தர் என்கின்ற சுந்தரமூர்த்தி தம்பி ஓடி விட்டார்
பின்னர் கார் டிரைவர் பாலகிருஷ்ணன், ஜெயச்சந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 500 ரூபாய் நோட்டுகள் 500 ரூபாய் நோட்டு போல உள்ள வெள்ளைத் தாள்கள், கார், பல்வேறு வங்கிகளின் ஏராளமான ஏடிஎம் கார்டுகள் மற்றும் ஏராளமான ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இரண்டு பேரும் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த மூன்று பேர் கைது.
கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள இடையப்பட்டி ஊரின் அருகே உள்ள வனப்பகுதியில்முன்தினம் இரவு துப்பாக்கிச் சூடும் சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தத்தை கேட்ட வனச்சரக அலுவலர் தண்டபாணி மற்றும் வனவர்கள் இரவு நேரத்தில் துப்பாக்கி சத்தம் கேட்ட பகுதிக்கு சென்று பார்த்த பொழுது தலையில் பேட்டரி லைட் பொருந்திய நிலையில் கையில் துப்பாக்கியுடன் மூன்று பேர் சுற்றுத்திரிவதை பார்த்து உள்ளனர்.
இதை அடுத்து உடனடியாக அவர்களை வனச்சரக அலுவலர் மற்றும் வனக்காப்பாளர்கள் பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணையில் அவர்கள் கடவுள் அருகே உள்ள தேக்கமலை கோவில்பட்டியைச் சேர்ந்த சிவகுமார் 31, மகாமுனி 55, மாணிக்கம் 45. என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் மூன்று பேரும் வனப்பகுதியில் உள்ள முயல் உடும்பு மற்றும் அவர்கள் கண்களுக்கு தெரியக்கூடிய வனவிலங்குகளை துப்பாக்கியால் சுட்டு பிடிக்க வந்தது தெரிய வந்துள்ளது. மூன்று பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த துப்பாக்கித் துப்பாக்கியில் சுடுவதற்கு பயன்படுத்தக்கூடிய கான்ட்ரஸ் குண்டுகள், பேட்டரி லைட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் இது தொடர்பாக அந்த மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து குளித்தலை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.