(Source: ECI/ABP News/ABP Majha)
Youtube : யூ ட்யூப் தளத்தில் கெட்டவார்த்தை.. விளைவுகள் என்ன? சைபர் பிரிவு வழக்கறிஞர் சொல்றத கேளுங்க..!
யூடியூபில் இருக்கக் கூடிய சைபர் குற்றங்கள் குறித்து சைபர் பிரிவு நிபுணர், வழக்கறிஞர் கார்த்திகேயனிடம் ஏபிபி நாடு சார்பாக பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் கூறினார். மேலும், டாக்சிக் மதன் தொடர்பான கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
கெட்ட வார்த்தை பேசுவது என்பது வீட்டில் இருந்தோ, நண்பர்களுடன் சேர்ந்து பேசுவதோ எல்லாமே தவறுதான். ஆனால் அது உங்களுக்கு சட்டப்பிரச்சனையை பிரச்னையாக உருவெடுக்காது. ஆனால், யூடியூப் என்பது பொதுவான ஒருதளம். அதில் கெட்டவார்த்தை பேசுவது கண்டிப்பாக குற்றம்தான். இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டாலும், இந்தியாவில் சமூகவலைதளங்களில் கெட்ட வார்த்தை பேசுவது தொடர்பாக, இதுவரை எதுவும் ஒழுங்குபடுத்தவில்லை என்பதே உண்மை.
என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன?
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 509, போக்சோ வழக்கு பிரிவில் வழக்கு 13,14,15 ஆகிய பிரிவு, தகவல் தொழில் நுட்ப வழக்கு பிரிவில் 66 இ, 67 பி ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம்.
PUBG Madan: ‛பப்ஜி முதல் கப்சிப் வரை’ மதன் மன்மதனாகி மாட்டிய கதை!
தான் யாரையும் விளையாட அழைக்கவில்லை என்பது டாக்சிக் மதனின் கருத்தாக உள்ள நிலையில், மற்றவர்கள் தானாகவே விளையாட சென்றுள்ளதால், அது தொடர்பான வழக்கில் வீரியம் இல்லாமல் போவதற்கான வாய்ப்புள்ளதா?
”அப்படி எல்லாம் கிடையாது. மதனை யூடியூபில் பின் தொடர்ந்தவர்கள் அனைவரும் சிறார்கள். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். அவர்களுக்கு இந்த வயதில், கவரக்கூடிய இதுபோன்றவைகளை பார்க்க தோன்றும். பார்ப்பதால், இது சரி என்று ஆகிவிடாது. அந்த வயதினருக்கு நல்லது எது, கெட்டது எது என்று தெரியாது. எது கவரக்கூடியதாய் உள்ளதோ, அதன் பின்னே செல்வார்கள் அவ்வளவுதான்.
இந்த மாதிரியான சைபர் குற்றத்தில் விசாரணை என்பது எப்படி இருக்கும்? எந்த மாதிரி ஆய்வு செய்வார்கள்?
சமூக வலைதளங்களில் ஆபாச பேச்சு தொடர்பு உள்ளிட்ட பல சைபர் குற்றங்களுக்கு, உங்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திலேயே புகார் அளிக்கலாம். ஒரு வேலை நீங்கள் கொடுக்கும் புகார் குறித்து, போலீஸ் நிலையத்தில் இருக்கும் காவல் துறை அதிகாரிக்கு தெரியவில்லை என்றால், அவர் அந்த புகாரை சைபர் கிரைம் பிரிவிற்கு அனுப்பி தகவல்களை கேட்டு தெரிந்து கொள்வார். மேலும், குற்றம்சாட்டப்பட்ட நபர், எந்த IP முகவரியில் இருந்து வீடியோக்களை எல்லாம் அப்லோடு செய்கிறார் என்றும், பல தகவல்களை யூடியூப் நிறுவனத்திடம், சைபர் கிரைம் பிரிவினர் கேட்பார்கள். அதன்பிறகு, யூடியூப், குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் குறித்த தகவல்களை அனுப்பும். அவர்கள் கொடுத்த IP முகவரியை, நெட் வசதியை வழங்கும் நிறுவனங்களிடம் கொடுத்து, குறிப்பிட்ட தேதியில் இந்த IP முகவரியை யாருக்கு கொடுத்தீர்கள் என்று கேட்பார்கள். அவர்கள் சில தகவல்களை சைபர் கிரைம் போலீசாருக்கு வழங்குவார்கள். அது என்ன தகவல்கள் என்றால், எதன் மூலமும் நெட் வசதிகோரி விண்ணப்பித்தாலும், வீட்டு முகவரி, அடையாள முகவரி மற்றும் புகைப்படம் கட்டாயம் கொடுக்க வேண்டும். இதை மூன்றும் கொடுத்தால்தான் நெட், செல்போனிலோ, பிராட்பேண்டிலோ ஆக்டிவேட் ஆகும். IP முகவரியை டிராக் செய்து, நெட் வசதியை நிறுவனங்களிடம் கேட்கும்போது, இந்த மூன்று ஆதாரங்களை போலீசாரிடம் அவர்கள் கொடுப்பார்கள். அதைக் கொண்டு குற்றம்சாட்டப்பட்டவர்களை சுலபமாக போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள்.
நமது நிருபர் அருண்மொழிவர்மன் மேலும் கேட்ட பல கேள்விகளுக்கும், சைபர் பிரிவு நிபுணர், வழக்கறிஞர் கார்த்திகேயன் பதில் கூறினார். அதைக்காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.
PUBG Madhan Arrested: பப்ஜி மதன் கைது: போலீஸ் காலில் விழுந்து கதறினார்! கைது நடந்தது எப்படி?