மேலும் அறிய

PUBG Madhan Arrested: பப்ஜி மதன் கைது: போலீஸ் காலில் விழுந்து கதறினார்! கைது நடந்தது எப்படி?

போலீசாரை கண்டதும் அதிர்ச்சியடைந்த மதன், போலீசார் காலில் விழுந்து கதறி அழுதுள்ளார். தான் செய்தது தவறு தான் என்றும், தன் மீதான குற்றங்களை ஏற்றுக்கொள்வதாகவும், தன்னை மன்னித்துவிடுமாறு கூறியுள்ளார்.

ஆபாச வார்த்தைகள் மூலம் ஆன்லைன் ஸ்ட்ரிமிங் பப்ஜி விளையாடி பணம் சேர்த்து வந்த யூடியூப்பர் மதன் மீது புகார் குவிந்து வருகிறது. அவர் மீது வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவரை தேடி வந்தனர். அவரது சொந்த ஊர் சேலம் என்பதும், சென்னை பெருங்களத்தூரில் தங்கி இருக்கிறார் என்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பெருங்களத்தூர் விரைந்தது போலீஸ். ஆனால் அவரது தந்தை மாணிக்கம் மற்றும் மனைவி கிருத்திகா ஆகியோர் மட்டுமே இருக்க, அவர்களிடம் நடத்திய விசாரணையில், மதனின் யூடியூப் சேனல்களுக்கு கிருத்திகா நிர்வாக அதிகாரியாக இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கிருத்திகாவை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். 


PUBG Madhan Arrested: பப்ஜி மதன் கைது: போலீஸ் காலில் விழுந்து கதறினார்! கைது நடந்தது எப்படி?

தப்பியோட்டம்!

தொடர்ந்து அவரது தந்தையிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2017 ம் ஆண்டு அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தில் அசைவ உணவகம் ஒன்றை மதன்குமார் நடத்தியுள்ளார். இதற்காக வங்கி மற்றும் நண்பர்களிடம் 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். ஆனால் எதிர்பார்த்த அளவு உணவகத்தில் வருவாய் இல்லை. இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்த மதன், கடைக்கு வாடகை கூட கட்ட முடியாமல் தவித்துள்ளார். இதைத் தொடர்ந்து வாடகை பாக்கி இருந்த போதே மதன் தலைமறைவாகியுள்ளார். அப்போது அவர் வைத்திருந்த வாடகை பாக்கி ரூ.2 லட்சம். அந்த கட்டடத்தின் உரிமையாளரான கஜபதி என்பவர், அம்பத்தூர் காவல்நிலையத்தில் அது தொடர்பாக புகார் அளித்து, அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. அதன் பிறகு தான், மதன் தீவிரமாக பப்ஜி விளையாட்டில் இறங்கி பணம் பார்க்கத்துவங்கியுள்ளார். தனது உருவத்தை வெளியிட்டால் தன்னை தேடும் கடன்காரர்கள் மற்றும் போலீசாரிடம் சிக்கி விடுவோம் என்பதற்காக தான், தன்னை அடையாளம் தெரியாத நபராக கடைசி வரை காட்டிக்கொள்ள முயற்சித்திருக்கிறார். கடைசியில் அது தான் தனது தொழிலுக்கும் பாதுகாப்பு என கருதி, அதை தனது அடையாளமாகவும் மாற்றிக்கொண்டார் என்கிற விபரம் தெரியவந்தது. 


PUBG Madhan Arrested: பப்ஜி மதன் கைது: போலீஸ் காலில் விழுந்து கதறினார்! கைது நடந்தது எப்படி?

கதறி அழுத மதன்

மதன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமின் மனுவை நேற்று ஒத்திவைத்த  நீதிபதி, மதனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இதன் மூலம் மதன் சரணடைவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அவரை கைது செய்வதில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மும்முரமாக இருந்தனர். இதற்கிடையில் மதன் தர்மபுரியில் வீடு ஒன்றில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடைப்பில் அங்கு ரகசியமாக சென்று குற்றப்பிரிவு போலீசார், பதுங்கியிருந்த மதனை கையும் களவுமாக பிடித்தனர். போலீசாரை கண்டதும் அதிர்ச்சியடைந்த மதன், போலீசார் காலில் விழுந்து கதறி அழுதுள்ளார். தான் செய்தது தவறு தான் என்றும், தன் மீதான குற்றங்களை ஏற்றுக்கொள்வதாகவும், தன்னை மன்னித்துவிடுமாறு கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், சென்னைக்கு அழைத்து வருகின்றனர். அங்கு நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய பின், விசாரணைக்கு எடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் கொடூர விபத்து: பொறியியல் கல்லூரி மாணவன் பலி - புதுமணத் தம்பதி உள்ளிட்ட மூவர் கவலைக்கிடம்!
மயிலாடுதுறையில் கொடூர விபத்து: பொறியியல் கல்லூரி மாணவன் பலி - புதுமணத் தம்பதி உள்ளிட்ட மூவர் கவலைக்கிடம்!
மனைவி கண்ணெதிரே பயங்கரம் !! நடுரோட்டில் வழிமறித்து கணவன் வெட்டிக் கொலை
மனைவி கண்ணெதிரே பயங்கரம் !! நடுரோட்டில் வழிமறித்து கணவன் வெட்டிக் கொலை
"என் பொண்டாட்டிய பாரு..." நண்பர்களிடம் லட்சக்கணக்கில் வசூல்: மயிலாடுதுறையில் ஒரு சைக்கோ கணவனின் கொடூரம்!
விமான நிலைய பார்சல்களை ஆட்டையை போட்ட துப்புரவுத் தொழிலாளி !! ரூ.3 லட்சம் மோசடி பெண் கைது
விமான நிலைய பார்சல்களை ஆட்டையை போட்ட துப்புரவுத் தொழிலாளி !! ரூ.3 லட்சம் மோசடி பெண் கைது

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Embed widget