Video Vastu Expert Murder : ஆசிர்வாதம் வாங்குவதுபோல கொடூரம்.. கூட்டமான ஹோட்டல்.. வாஸ்து நிபுணர் படுகொலை.. பதறவைத்த வீடியோ..
சோபாவில் இருவர் காத்திருக்கின்றனர்.சிறிது நேரத்தில் சந்திரசேகர் குருஜி அங்கு வருகைதந்து அந்த சோபா அருகே அமர்கிறார்.
பிரபல வாஸ்து நிபுணரான சந்திரசேகர் குருஜி கர்நாடகாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பட்டப்பகலில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
வாஸ்து நிபுணரான சந்திரசேகர் குருஜி ஒப்பந்தகாரராக தன்னுடைய தொழிலைத் தொடங்கினார். பின்னர் வாஸ்து குருஜியாக அறியப்பட்டார். இந்நிலையில் கர்நாடகாவின் ஹூப்ளியில் உள்ள ஒரு ஹோட்டலில் இவர் படுகொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் பரபரப்பான ஹோட்டலின் நடுவே நடந்த இந்த படுகொலை கர்நாடகாவை அதிரை வைத்துள்ளது. அவர் கொலைசெய்யப்படும் வீடியோ அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அந்த காட்சியின்படி, ஹோட்டல் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
Saral Vaastu’ fame Dr. Chandrashekhar Guruji killed
— Madhu M (@MadhunaikBunty) July 5, 2022
“Saral Vaastu” fame Dr. Chandrashekhar Guruji has been reportedly #murdered in the broad daylight, here on Tuesday. As per the reports, he was stabbed and murdered in a private hotel near Unkal Lake. #Hubli pic.twitter.com/gVjr1T9ExA
அங்குள்ள சோபாவில் இருவர் காத்திருக்கின்றனர்.சிறிது நேரத்தில் சந்திரசேகர் குருஜி அங்கு வருகைதந்து அந்த சோபா அருகே அமர்கிறார். அங்கிருந்த இருவரும் எழுந்து அவரிடம் ஆசீர்வாதம் வாங்குவதைப் போல காலைத் தொட்டு வணங்குகின்றனர். அப்போது ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து வாஸ்து குருஜியை மாறிமாறி குத்துகிறார். ரத்தவெள்ளத்தில் சந்திரசேகர் சரிந்து விழ, விடாமல் கத்தியால் குத்துகின்றனர் இருவரும்.
சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் திரும்பிப் பார்க்க ரத்த வெள்ளத்தில் ஒருவர் சரிந்து விழுகிறார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கொலையை தடுக்க முயன்றும் கொலையாளிகள்கத்தியைக் காட்டி மிரட்டியதால் அனைவரும் விலகிச் செல்கின்றனர். இந்த கொலைவெறித்தாக்குதலால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் சந்திரசேகர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை தேடத் தொடங்கினர். கொலை சிசிடிவியில் பதிவாகி உள்ளதால் அதனடிப்படியில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். ஏதேனும் முன் பகைகாரணமாக இந்த கொலை நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. முதற்கட்ட விசாரணையில் குருஜி ஜூலை 3ம் தேதி ஹூப்ளிக்கு சொந்த வேலைக்கு வந்ததாகவும், ஒரு ஹோட்டலில் அவர் தங்கி இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்