மேலும் அறிய
Advertisement
Crime: அழகான இளம்பெண்கள்.. பவுன்சர்கள்.: 'சதுரங்க வேட்டை' பட பாணியில் ஏமாந்த பின், பலரிடம் பணமோசடி..!
ஏமாற்றுவதை தொழிலாக கொண்டு பலரிடம் பண மோசடி செய்த நபரை கன்னியாகுமரி போலீசார் கைது செய்தனர்.
ஏமாற்றுவதை தொழிலாக கொண்டு பலரிடம் பண மோசடி செய்த நபரை கன்னியாகுமரி போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி வடக்கு குண்டல் பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் கடந்த 30-ந் தேதி 2 பெண்கள் உள்பட 8 பேர் கொண்ட கும்பல் வந்து சில அறைகளை எடுத்து தங்கினர். அவர்களை சந்திப்பதற்காக பலரும் கார்களில் விடுதிக்கு வந்து சென்ற வண்ணம் இருந்தனர். அவர்கள் பெரிய பெரிய பெட்டிகளுடன் வந்ததால் அந்தப்பகுதி பரபரப்பானது. இதனால் அங்கு உள்ள பொதுமக்கள் சந்தேகம் அடைந்து கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அந்த லாட்ஜுக்கு வந்தனர். அவர்களை கண்டதும் அங்கிருந்த சிலர் தப்பி ஓடி விட்டனர். விசாரணையில் அவர்கள் பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்தது.
விடுதி அறையில் இருந்து 2 பெண்கள் உள்பட 8 பேர் போலீசாரிடம் சிக்கினர். அவர்களில் ஒருவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பேரையூர் பகுதியை சார்ந்த சுந்தர பாண்டியன், தன்னிடம் ரூ.10 ஆயிரம் கொடுத்தால் 3 மாதத்தில் 5 மடங்காக ரூ.50 ஆயிரம் கொடுப்போம் என பலரிடமும் கூறி உள்ளார்.
மேலும் புரோக்கர்கள் மூலமும் தகவல் கொடுத்து பலரை பணத்துடன் கன்னியாகுமரி வரவழைத்து உள்ளார். இந்தக் கும்பலின் போலி வாக்குறுதிகளை நம்பி 25-க்கும் மேற்பட்ட நபர்கள் பணத்தை கொடுத்து ஏமாந்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் தங்கி இருந்த அறைகளை சோதனை செய்த போலீசார் அங்கிருந்த ஆவணங்கள், 10-க்கும் மேற்பட்ட செல்போன்கள், லேப்டாப், மற்றும் ரூ.11 லட்சத்தை கைப்பற்றி உள்ளனர். பின்னர் அவர்கள் 8 பேரையும் கன்னியாகுமரி போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர் , விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சார்ந்த சுந்தர பாண்டியன் சரவண பவன் ஓட்டலில் சர்வராக வேலை செய்து வந்துள்ளார். அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேரசையில் ரைஸ் புல்லிங் எனப்படும் இரிடியம் மோசடி கும்பலிடமும் மண்ணுளி பாம்பு விற்கும் கும்பலிடமும் சிக்கி பணம் கொடுத்து வசமாக ஏமாந்துள்ளார் , விரக்தியில் சுத்தி திரிந்த சுந்தர பாண்டியனுக்கு சதுரங்க வேட்டை படத்தில் "உன்னை ஏமாற்றும் நபர் மீது கோவம் வேண்டாம் ஒரு வகையில் அவன் உனக்கு குரு" என வரும் வசனம் போல் தான் ஏமாந்த வழியை பின்பற்றி மற்றவர்களை ஏமாற்ற வேண்டும் என முடிவு செய்துள்ளார் சுந்தர பாண்டியன். அந்த வகையில் தமிழகம் முழுவதும் பல நபர்களை தொடர்பு கொண்டு 3 மாதத்தில் 5 மடங்கு பணம் தருவதாக ஆசையை தூண்டும் வகையில் பேசி பல நபர்களை தனது மோசடி வலையில் சிக்க வைத்துள்ளார்.
தன்னை ஒரு தொழிலதிபர் போல் காட்டிக்கொள்ள பவுன்சர்கள் மற்றும் அழகான இளம் பெண்களை அசிஸ்டன்ட்களாக பணியமர்த்தி காரில் பந்தா செய்து வந்துள்ளார். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற பழமொழியை உண்மையாகும் வகையில் தற்போது மோசடி மன்னன் போலீசார் வலையில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கும்பலை சேர்ந்த 17 பேர் மீது 420 உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த கன்னியாகுமரி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரிடம் ஏமாந்தவர்கள் யார் யார் என்பதை கண்டறிய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion