Kannada Actor Arrest | இரண்டு வருட காதல்.. திருமணத்துக்கு நோ.. பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பிரபல நடிகர்..
திருமணம் செய்து கொள்வதாக கூறி இரண்டு ஆண்டுகளாக நடிகையை பாலியல் பலாத்காரம் செய்த தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமணம் செய்து கொள்வதாக கூறி இரண்டு ஆண்டுகளாக நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த தயாரிப்பாளரும் நடிகருமான ஹர்ஷவர்தன் என்ற விஜய் பார்கவ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னடத்திரையுலகில் ‘விஷன் 2023’ என்ற படத்தை தயாரித்து நடித்தவர் ஹர்ஷவர்தன் என்ற விஜய் பார்கவ். இவர் சகநடிகை ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி, கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட நடிகை திருமணம் செய்ய வலியூறுத்திய போது, அவரிடம் பேசுவதை தவிர்த்ததோடு,உன்னை ஏன் திருமணம் செய்ய வேண்டும்? என்று கூறியுள்ளார்.
மேலும், இவ்வாறு தொடர்ந்து வலியுறுத்தும் பட்சத்தில் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கொலை மிரட்டல் விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட அந்த நடிகை இது குறித்து அன்னபூர்ணேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த காவல்துறை, விஜய் பார்கவ் மீது IPC பிரிவுகளின் கீழ் (417 ( ஏமாற்றுதல்) 376 ( கற்பழிப்பு) 504 ( அவமதிப்பு) 506 ( மிரட்டல்) ) போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும், டிஜிட்டல் கருவிகள், பொருட்கள், உடல் தொடர்பான ஆதாரங்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட நடிகையும் மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள நடிகர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்