மேலும் அறிய

ரயில் பெட்டியில் அழுகிய நிலையில் பெண் சடலம்... பின்னணியில் நடந்த கொடூரம் - கொலையாளியை காட்டிக்கொடுத்த முக்கியத் தடயம் எது?

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பெண் பாலியல் வன்கொடுமை கொன்ற வழக்கில் பராரியாக சுற்றித்திரிந்தவர் கைது.

நாகர்கோவில் ரயில் நிலையத்தில், பயணிகள் ரயில் பெட்டியில் சடலமாக கிடந்த பெண் கொலை வழக்கில் கன்னியாகுமரியை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிக்கு கொண்டு சென்ற ரயில் பெட்டியின் பயணிகள் இருக்கை அடியில் 50 மதிக்கதக்க ஒரு பெண்ணின் உடலை ரயில்வே போலீசார் கைப்பற்றி சிசிடிவி கேமராக்கள் மூலம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. இது சம்பந்தமாக செண்பகராமன் புதூரை சேர்ந்த ஐயப்பன் என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

அழுகிய நிலையில் பெண் சடலம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கடந்த நவம்பர் 18-ஆம் தேதி 13-வது யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வண்டி எண் 16366 ரயிலின் பின்பக்க மாற்றுத்திறனாளிகள் பெட்டியில், சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து நாகர்கோவில் கிழக்கு கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், நாகர்கோவில் இருப்புப்பாதை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற பிரேதப் பரிசோதனையில் அந்தப் பெண் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

சிசிடிவியில் சிக்கிய கொலையாளி

இவ்வழக்கில் குற்றவாளியைப் பிடிக்க காவல் ஆய்வாளர்  கேத்தரின் சுஜாதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து சிசிடிவி கேமரா பதிவுகளையும் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில், கடந்த நவம்பர் 14-ஆம் தேதி காலை 8 மணியளவில், 4 மற்றும் 5-வது நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் மாற்றுத்திறனாளிகள் பெட்டியிலிருந்து வெள்ளை வேட்டி மற்றும் சட்டை அணிந்த நபர் ஒருவர் இறங்கிச்செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அந்த தடயத்தை வைத்து நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், அந்த நபர் கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூரைச் சேர்ந்த ஜான்சன் என்பவரின் மகன் ஐயப்பன் (31) என்பது தெரியவந்தது.

பாலியல் வன்கொடுமை செய்து கொலை

கடந்த 4 மாதங்களாகப் பராரியாகச் சுற்றித் திரிந்து வந்த இவர், கடந்த 14-ஆம் தேதி அதிகாலை 12.30 மணியளவில் 5-வது நடைமேடையில் நடந்து சென்ற அடையாளம் தெரியாத அந்தப் பெண்ணை ஆள் நடமாட்டமற்ற மாற்றுத்திறனாளிகள் பெட்டிக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளார். அங்கு அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கொடூரமாகத் தாக்கிப் பலத்த காயங்களை ஏற்படுத்தி கொலை செய்திருப்பது விசாரணையில் அம்பலமானது.

இதையடுத்து, ஐயப்பனை கைது செய்த இருப்புப்பாதை காவல்துறையினர், உரிய விசாரணைக்குப் பின் அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

சீர்காழி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பற்ற சூழல்: குழந்தை திருட்டு நடக்கும் முன் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
சீர்காழி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பற்ற சூழல்: குழந்தை திருட்டு நடக்கும் முன் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
தாய் கீதாவை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகள்.. சிக்கியது எப்படி? விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
தாய் கீதாவை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகள்.. சிக்கியது எப்படி? விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
உல்லசமாக இருக்க சென்ற ஜோடியை வெட்டிக்கொன்ற தவெக நிர்வாகி.. ஏன் கொலை செய்தேன்? - சொன்ன அதிர்ச்சி காரணம்
உல்லசமாக இருக்க சென்ற ஜோடியை வெட்டிக்கொன்ற தவெக நிர்வாகி.. ஏன் கொலை செய்தேன்? - சொன்ன அதிர்ச்சி காரணம்
தனிஷ்க் கொள்ளை நிஷாந்த்: சிரித்தபடி சிறைக்கு; டிச.4 வரை நீதிமன்ற காவல்!
தனிஷ்க் கொள்ளை நிஷாந்த்: சிரித்தபடி சிறைக்கு; டிச.4 வரை நீதிமன்ற காவல்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளிக்கல்வித்துறை ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்! கட்டாய மாறுதல் யாருக்கு? விலக்கு யாருக்கு? இதோ முழு விவரம்!
பள்ளிக்கல்வித்துறை ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்! கட்டாய மாறுதல் யாருக்கு? விலக்கு யாருக்கு? இதோ முழு விவரம்!
Trump: ”இந்தியாவை பாருங்கயா, இவ்ளோ வட்டிய போட்டா எப்படி” - அமெரிக்க ரிசர்வ் வங்கியுடன் ட்ரம்ப் மோதல்
”இந்தியாவை பாருங்கயா, இவ்ளோ வட்டிய போட்டா எப்படி” - அமெரிக்க ரிசர்வ் வங்கியுடன் ட்ரம்ப் மோதல்
Revanth Reddy: ”பாத்ததும் பத்திக்கிச்சு” 1750KM பைக்கில் பயணம் - தெலங்கானா CM ரேவந்த் ரெட்டியின் காதல் கதை
”பாத்ததும் பத்திக்கிச்சு” 1750KM பைக்கில் பயணம் - தெலங்கானா CM ரேவந்த் ரெட்டியின் காதல் கதை
Gold Rate Today: நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டம்! இன்றும் குறைந்த தங்கம்... சவரன் எவ்வளவு தெரியுமா?
Gold Rate Today: நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டம்! இன்றும் குறைந்த தங்கம்... சவரன் எவ்வளவு தெரியுமா?
Hemorrhoids: இளைஞர்களிடம் அதிகரிக்கும் பிரச்னை..! உஷார், இல்லாட்டி கீழ உட்கார கூட முடியாது - மூலம் பாதிப்பு
இளைஞர்களிடம் அதிகரிக்கும் பிரச்னை..! உஷார், இல்லாட்டி கீழ உட்கார கூட முடியாது - மூலம் பாதிப்பு
Chennai Traffic Diversions: சென்னை வாகன ஓட்டிகளே.. தப்பி தவறி கூட அந்த பக்கம் போயிடாதீங்க.. போக்குவரத்தில் மாற்றம்!
Chennai Traffic Diversions: சென்னை வாகன ஓட்டிகளே.. தப்பி தவறி கூட அந்த பக்கம் போயிடாதீங்க.. போக்குவரத்தில் மாற்றம்!
TN Weather News: புஸ்ஸென போன அக்வான்..! உறைபனி வார்னிங், மழைக்கு வாய்ப்பு இருக்கா? தமிழக வானிலை அறிக்கை
புஸ்ஸென போன அக்வான்..! உறைபனி வார்னிங், மழைக்கு வாய்ப்பு இருக்கா? தமிழக வானிலை அறிக்கை
Scholarship: மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க! வங்கி கணக்கில் நேரடியாக ரூ.50,000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Scholarship: மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க! வங்கி கணக்கில் நேரடியாக ரூ.50,000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Embed widget