மேலும் அறிய

Crime : உறவு முறையில் அண்ணன், தங்கை.. எதிர்ப்பை மீறிய இளைஞரை அடித்துக்கொன்ற பெண்ணின் தாய்மாமன்கள்..

Sriperumbathur News : " நிரஞ்சன் வீட்டிற்கு வந்து, வீட்டில் இருந்தவரை கட்டை மற்றும் கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர் "

ஜனார்த்தனன், புகழேந்தி ஆகிய இருவர் மீதும் தற்போது ஸ்ரீபெரும்புதூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்
 
உறவு முறையில் , அண்ணன் தங்கை
 
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் நிரஞ்சன் (21) ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரம்யா (19) என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரது காதல் விவகாரம் ரம்யாவின் வீட்டிற்கு தெரிய வந்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ரம்யாவின் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இருப்பினும், அவர் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி தானாக புறப்பட்டு நிரஞ்சன் வீட்டிற்கு சென்றுள்ளார். குறிப்பாக இருவரும் உறவினர்கள் என்பதால் உறவு முறையில், நிரஞ்சன் மற்றும் ரம்யா ஆகிய இருவரும் அண்ணன் தங்கை முறை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வாய்ப்பில்லை என ரம்யாவிற்கு எடுத்துக் கூறியுள்ளனர். இருந்தும் ரம்யா. நிரஞ்சன் மீது இருந்த காதலை கைவிடவில்லை என கூறப்படுகிறது. 
 
கண்டித்து அனுப்பியுள்ளனர்
 
பின்னர், பெரியவர்கள் சமாதானம் செய்து ரம்யாவை அழைத்துச் சென்றுள்ளனர். இதனால், ரம்யாவின் பெற்றோர் அவரை திருவள்ளூர் மாவட்டம் புள்ளரம்பாக்கத்தில் உள்ள ரம்யாவின் பாட்டி வீட்டில் தங்க தங்க வைத்திருந்துள்ளனர். இந்தநிலையில், ரம்யாவை அவரது பெற்றோர் திருவள்ளூர் வீட்டில் தங்க வைத்திருந்த போது, நிரஞ்சன் திருவள்ளூர் சென்று ரம்யாவை சந்தித்துள்ளார். அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் சிலர் நிரஞ்சனை அப்பொழுது கண்டித்து அனுப்பியுள்ளனர்.
 
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
 
கடந்த 22 ஆம் தேதி ரம்யாவின் தாய் மாமன்களான புகழேந்தி மற்றும் ஜனார்த்தனன் இருவரும், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள மண்ணூரில் உள்ள நிரஞ்சன் வீட்டிற்கு வந்து, வீட்டில் இருந்தவரை கட்டை மற்றும் கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம்பட்ட நிரஞ்சன் இடது கன்னத்தில் வீக்கம் மற்றும் இடது காதுக்கு பின்னால் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர், நிரஞ்சன் சுயநினைவை இழந்து , தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 22ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி தற்போது இறந்து போனார்.
 
இதையடுத்து, காதல் விவரத்தில் இளைஞரை கண்மூடித்தனமாக தாக்கிய வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஜனார்த்தனன், புகழேந்தி ஆகிய இருவர் மீதும் தற்போது ஸ்ரீபெரும்புதூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். உறவு முறையில் குழப்பம் காரணமாக இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget