மேலும் அறிய
Advertisement
காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் பொக்கிஷ அறையில் 16 சிலை; வருகின்ற 31ம் தேதி விசாரணை
காஞ்சிபுரம் ஏகாம்பாநாதர் கோயிலில் பல ஆண்டுகாலமாக பொக்கிஷ அறையில் இருந்த சிலை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் ஏகாம்பாநாதர் கோயிலில் பல ஆண்டு காலமாக பொக்கிஷ அறையில் இருந்த சிலை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் ( kanchipuram ekambareswarar temple )
காஞ்சிபுரம் (Kanchipuram News): ஏகாம்பரேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இந்தக் கோயிலின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில் முதல் கட்டுமானங்கள், 600 ஆம் ஆண்டே , கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
பொக்கிஷ அறையில் உற்சவர் சிலைகள்
ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள பொக்கிஷ அறையில் ஆவணங்களில் வராத பல சிலைகள் மற்றும் கோயிலுக்கு சொந்தமான பொருட்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில் ஏகாம்பரநாதர் கோயில் பொக்கிஷ அறையில் புதியதாக 16 உற்சவர் சிலைகள் இருப்பது கடந்த 2001 ஆம் ஆண்டு தெரிய வந்தது. ஊழியர்கள் நடத்திய ஆய்வில் விநாயகர், லட்சுமி, 9 நாயன்மார்கள் உள்ளிட்ட 16 சிலைகள் இருந்தன.
எவ்வளவு காலமாக ?
கோயில் வளாகத்திற்குள் இருக்கும் பொக்கிஷ அறையில் கோயிலில் உள்ள சுவாமி சிலைகள் மற்றும் உற்சவர் சிலைகளுக்கு பயன்படுத்தும் அலங்கார பொருட்கள் பூஜைக்கு பயன்படுத்தும் பஞ்சபாத்திரம் போன்ற பொருட்கள் ஆகியவை மட்டுமே வைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் அப்படிப்பட்ட கோயில் பொக்கிஷ அறையில் எவ்வளவு காலமாக, இந்த உற்சவர் சிலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வளவு காலமாக ஏன் அந்த உற்சவர் சிலைகள் பயன்படுத்தப்படாமல், பொக்கிஷ அறைகளை பூட்டி வைக்கப்பட்டு இருக்கிறது என கேள்வி எழுந்திருந்தது. இந்த சிலைகள் குறித்த தகவல்கள் கோவில் ஆவணங்களில், இதுவரை குறிப்பிடப்படாமல் இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
வழக்கு பதிவு செய்து விசாரணை
இந்தநிலையில், இதுகுறித்து சமூக ஆர்வலர் வெங்கட்ராமன் என்பவர், அளித்த புகாரின் படி நிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பல்வேறு பிரிவிற்கு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் புகார் அளித்த வெங்கட்ராமன் என்பவர், இந்த வழக்கின் சாட்சியமாக காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த தினேஷ் சேர்க்கப்பட்டுள்ளார். வருகின்ற போது 31 - ஆம் தேதி இதுகுறித்து தினேஷிடம் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தினேஷ்யை திருச்சி மத்திய மண்டல சிலை கடத்தல் பிரிவு அலுவலகத்தில், உரிய ஆவணங்களுடன் ஆஜராக மாறு, சிலை கடத்தல் பிரிவு போலீசார் தகவல் அனுப்பி உள்ளார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion