மேலும் அறிய

'பணம் போட முடியுமா..? முடியாதா..?' - காஞ்சிபுரத்தில் மீண்டும் ரவுடிகள் அட்டகாசமா ?

தொலைபேசி வாயிலாக ரவுடி ஒருவர் நெல் வியாபாரியை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கோயில் நகரம் , கொலை நகரமான கதை
 
காஞ்சிபுரம் நகரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பு, கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி ஸ்ரீதர். ஆரம்பத்தில் ரவுடியாக இருந்து வந்த ஸ்ரீதர் தனபாலன், படிப்படியாக வளர்ந்து காஞ்சிபுரம் மாநகர் பகுதியில் தவிர்க்க முடியாத நபராக இருந்து வந்தார். காஞ்சிபுரம் மாநகரில் ஸ்ரீதர் வைப்பதே சட்டமாகவும் இருந்து வந்தது. 
 
இந்நிலையில் தான் காவல்துறையினர், ஸ்ரீதரை கைது செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த பொழுது வெளிநாடு தப்பிச் சென்றார். காவல்துறையினர் தன்னை சுற்றி வளைத்ததை அறிந்து கொண்ட ஸ்ரீதர் , கடந்த 2017-ம் ஆண்டு கம்போடியா நாட்டில் தற்கொலை செய்து  கொண்டார்.
பணம் போட முடியுமா..? முடியாதா..?' - காஞ்சிபுரத்தில் மீண்டும் ரவுடிகள் அட்டகாசமா ?
 
இவரின் முக்கிய கூட்டாளிகளான ரவுடி தினேஷ்குமார் என்பவர் மீது 5 கொலை வழக்குகள் உள்பட சுமார் 30 வழக்குகளும், ரவுடி தியாகு என்பவர் மீது 8 கொலை வழக்குகள், 11 கொலை முயற்சி வழக்குகள் உள்பட சுமார் 51 வழக்குகளும் உள்ளன. ஒரு கட்டத்தில் தினேஷ் குமார் மற்றும் தியாகு ஆகியோர் இருவரும் தனி கோஷ்டிகளாக பிரிந்து கொண்டு, தங்களில் யார் அடுத்ததாக தாதா போட்டியில் 13-க்கும் மேற்பட்ட கொலைகளை செய்து கொண்டனர். இதனை அடுத்து அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்து,  கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

பணம் போட முடியுமா..? முடியாதா..?' - காஞ்சிபுரத்தில் மீண்டும் ரவுடிகள் அட்டகாசமா ?
 
மீண்டும் தலை எடுத்த அட்டகாசம்
 
இந்த நிலையில், பொய்யாக்குளம் தியாகு ஜாமினில் வெளிவந்த பொழுது, மீண்டும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். காஞ்சிபுரம் நகர் பகுதியில் அவ்வப்பொழுது இது போன்ற ரவுடிகள் அட்டகாசம் செய்வதும், ரவுடிகளை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் பகுதியில் மற்றொரு தாதா உருவாகாமல் இருக்க தொடர்ந்து பல்வேறு, நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

பணம் போட முடியுமா..? முடியாதா..?' - காஞ்சிபுரத்தில் மீண்டும் ரவுடிகள் அட்டகாசமா ?
 
மற்றொரு மிரட்டல் சம்பவம்
 
இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லவர்மேடு பகுதியை சேர்ந்த நெல் வியாபாரி தியாகு,  என்பவருக்கு நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர், சிறையில் இருக்கும் பொய்யாகுளம் தியாகு பெயரை கூறி மிரட்டல் வைத்துள்ளார். உடனடியாக தான் கேட்கும் தொகையை தரவில்லை என்றால், " சீன் வேற மாதிரி மாறிவிடும், உன் உயிரே என்னிடம் தான் இருக்கிறது,  நீ உயிரோடு இருக்க மாட்டாய், பணம் போட முடியுமா முடியாதா, ' நீ போடவில்லை என்றால் நீயே போன் செய்து பணத்தை போடுவாய்" என தியாகுவை அந்த மர்ம நபர் தொலைபேசியில் மிரட்டி உள்ளார். 

பணம் போட முடியுமா..? முடியாதா..?' - காஞ்சிபுரத்தில் மீண்டும் ரவுடிகள் அட்டகாசமா ?
 
காவல் நிலையத்தில் புகார்
 
இதனை அடுத்து தியாகு கொலை மிரட்டல் விடுத்ததை குறித்து சிவக்காஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர. முதற்கட்ட விசாரணையில், ரவுடி பொய்யா குளம் தியாகுவின் நண்பராக கருதப்படும் பிரபா என்பவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. பிரபா மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மேலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகர் பகுதியில் மீண்டும் ரவுடிகள் வியாபாரிகளை மிரட்டும், சம்பவம் நடைபெற்றுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தலைப்பு செய்திகள்

விழுப்புரத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை! ரூ.7.10 லட்சம் பணம் அபேஸ்; CCTV ஹார்டு டிஸ்க்குகளும் மாயம்!
விழுப்புரத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை! ரூ.7.10 லட்சம் பணம் அபேஸ்; CCTV ஹார்டு டிஸ்க்குகளும் மாயம்!
பணியிட மாறுதலால் ஆத்திரம்... கிளை மேலாளரை கத்தியால் கிழித்த பஸ் டிரைவர்
பணியிட மாறுதலால் ஆத்திரம்... கிளை மேலாளரை கத்தியால் கிழித்த பஸ் டிரைவர்
வாயைக் கொடுத்து சிக்கிய மதுபிரியர்: ஒத்த ஸ்டிக்கரால் பறிபோன 10,000 ஆயிரம் ரூபாய்...
வாயைக் கொடுத்து சிக்கிய மதுபிரியர்: ஒத்த ஸ்டிக்கரால் பறிபோன 10,000 ஆயிரம் ரூபாய்...
தந்தை என்ற உறவுக்கே களங்கம்! பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் அதிரடி கைது!
தந்தை என்ற உறவுக்கே களங்கம்! பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் அதிரடி கைது!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget