மேலும் அறிய
Advertisement
Kanchipuram: பைக்கில் சென்ற இளைஞர்களை காரை கொண்டு முட்டிய நபர் - கொலை வழக்கு பதிவு செய்ய உறவினர்கள் கோரிக்கை
பைக்கில் வந்த இளைஞர்களை காரை கொண்டு தட்டி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு. மேலும் ஒருவர் படுகாயங்களுடன் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதி.
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மொளச்சூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் விஷ்ணு (24), ஏழுமலை (30). விஷ்ணு அதே பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுங்குவார்சத்திரம் பஜாருக்கு கோழி இறைச்சி வாங்க பைக்கில் இருவரும் சென்றுள்ளனர். அப்போது விஷ்ணு ஓட்டி சென்ற பைக்குக்கு முன்பாக சென்ற கார் ஒன்று இன்டிகேட்டர் எதுவும் போடாமல் திடீரென வளைவில் திரும்பி உள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த விஷ்ணு கார் மீது மோதினார். இதன் காரணமாக விஷ்ணுவுக்கும், காரை ஓட்டி வந்த திருவள்ளூர் மாவட்டம் பண்ணூரை சேர்த்த பாங்கிராஸ் (62) ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் சிலர் விஷ்ணுவையும் காரை ஓட்டி வந்த பாங்கிராஸையும் சமாதானம் செய்து அனுப்பினர். பின்னர் அங்கிருந்து விஷ்ணு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். சிறிது தூரம் சென்ற நிலையில் பாங்கிராஸ் காரை அதிவேகத்தில் ஓட்டிச் சென்று விஷ்ணு சென்ற பைக்கின் பக்கவாட்டு பகுதியில் இடித்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்றார்.
இந்த விபத்தில் விஷ்ணு தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த ஏழுமலை படுகாயம் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்த மக்கள் சிலர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து படுகாயமடைந்த ஏழுமலையை மீட்டு சிகிச்சைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஏழுமலைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து வந்த விஷ்ணுவின் மனைவி உறவினர்கள் கார் ஓட்டுனர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து போலீசார் காரை இயக்கி சென்று விபத்தை ஏற்படுத்தி கொலை செய்த பாங்கிராஸை கைது செய்ததோடு காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இளைஞர்களிடம் வாக்குவாதம் செய்து இருசக்கர வாகனத்தை அணைத்துக் கொண்டே சென்று காரின் பக்கவாட்டு பகுதியில் முட்டி தள்ளி இளைஞர்கள் இருவரும் தூக்கி வீசப்படும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion