மேலும் அறிய
Advertisement
காஞ்சிபுரம் : மனைவியுடன் தவறான நட்பு : நண்பனை சரமாரியாக வெட்டிக்கொன்றவர் கைது..!
எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தினால் மணிமங்கலம் காவல் நிலையத்தில் நண்பர்களுடன் சென்ற ராமு காணவில்லை என்று அவர்களுடைய உறவினர்களும், மனைவியும் புகார் அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள வஞ்சுவாஞ்சேரி பகுதியில் உள்ள அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ரேணுகா (31) இவருடைய கணவர் ராமு (32). கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அதே ஊரை சேர்ந்த தனது நண்பர்களுடன் வீட்டைவிட்டு வெளியே சென்ற ராமு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார். இதனால் வருத்தமடைந்த அவர்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ராமுவை பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தினால் மணிமங்கலம் காவல் நிலையத்தில் நண்பர்களுடன் சென்ற ராமு காணவில்லை என்று அவர்களுடைய உறவினர்களும், மனைவியும் புகார் அளித்தனர்.
புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் தங்களுடைய விசாரணையை துவங்கினர். ராமு யாருடன் வெளியே சென்றார் உள்ளிட்ட தகவல்களை விசாரித்தபொழுது, ராமு அவருடைய நண்பர் மணி என்பவருடன் வெளியே சென்றதாக மணியின் தந்தை முத்துகிருஷ்ணன் போலீசாரிடம் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் ராமுவின் நண்பர் மணியைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ராமுவை தான்தான் கொன்றதாக மணி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். எதற்காக கொலை செய்ததாக காவல்துறை தரப்பில் கேள்வி எழுப்பியபோது முதலில் காரணத்தைக் கூறுவதற்கு மறுப்பு தெரிவித்த மணி பின்பு தான் எதற்காக நண்பர் ராமுவை கொலை செய்ததாக அளித்த வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
நண்பரான ராமு தன்னுடைய மனைவி மகாலட்சுமியுடன் (32) கள்ள தொடர்பு வைத்திருந்ததாகவும் ராமுவை ஏற்கனவே பலமுறை எச்சரித்து அனுப்பியதாகவும் ஆனால் இதனை சற்றும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து கள்ளக்காதலில் ஈடுபட்டதால் ராமுவை கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.மேலும் ராமுவை கொலை செய்ய திட்டமிட்ட மணி படப்பை அருகே மது அருந்த வைத்து மது போதையில் இருந்த ராமுவின் கழுத்தை நெறித்து, பின்னர் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்ததாகவும். இதனை அடுத்து ராமுவின் உடலை கல்லை கட்டி அருகில் உள்ள கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றுள்ளனர். இதனை அடுத்து போலிசார் கிணற்றில் இருந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தானர் .
மேலும் நண்பர் ராமுவை கொலை செய்வதற்கு மணியின் நண்பர்கள் சிலரும் உதவி செய்துள்ளனர் அவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு மற்றும் மணி ஆகிய இருவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் நீண்ட நாட்களாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர். தற்போது மணி கைது செய்யப்பட்டுள்ளார்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion