மேலும் அறிய
Advertisement
Crime : சந்தேகப் பேய்.. கடப்பாறை.. பதறவைக்கும் திட்டம்.. மனைவியை கொன்றுவிட்டு சரணடைந்த கணவர் பகீர் வாக்குமூலம்..
குன்றத்தூரில் நடத்தையில் சந்தேகத்தால் கடப்பாறையால் அடித்து மனைவியை கொலை செய்த கணவன் காவல்துறையினரிடம் சரணடைந்தார்
சென்னை, குன்றத்தூர் அடுத்த கலெடிபேட்டை, அம்பேத்கர் குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (45), தனியார் கிளப்பில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி அலமேலு (42), பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து தற்போது வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இவர்களுக்கு மோனிஷா, வசுந்தரா என இரண்டு மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவரும் நேற்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டனர். வீட்டில் ரமேஷ் அவரது மனைவி அலமேலு மட்டும் இருந்தனர். நேற்று மதியம் அவரது வீட்டில் அலமேலு அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர் கதவு உள்பக்கமாக சாத்தப்பட்டு இருந்ததால் கதவை உடைத்து உள்ளே செல்ல முயன்றனர்.
பிரேத பரிசோதனை
ஆனால் சிறிது நேரத்தில் ரமேஷ் வீட்டில் இருந்து வெளியே வந்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அலமேலு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த அலமேலு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
சரண் அடைந்தார்
மேலும் தலைமறைவாக இருந்த ரமேஷ் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார் அவரிடம் போலீஸ் விசாரணையில் மனைவியின் மீது ரமேசுக்கு அடிக்கடி சந்தேகம் ஏற்பட்டு வந்துள்ளதால் கணவன், மனைவியை அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அலமேலு அயனாவரத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கிருந்து சமாதானம் பேசி நேற்று முன்தினம் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் வீட்டில் இருந்த கடப்பாறை எடுத்து மனைவியின் தலையில் அடித்து கொலை செய்து விட்டு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தில் கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், இது குறித்து தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து காவல்துறையினும் தொடர்பு கொண்டு கேட்டபொழுது, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அலமேலு அயனாவரத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கிருந்து சமாதானம் பேசி நேற்று முன்தினம் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் வீட்டில் இருந்த கடப்பாறை எடுத்து மனைவியின் தலையில் அடித்து கொலை செய்து விட்டு போலீஸ் நிலையத்தில் சரண் சரணடைந்தார், இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion