மேலும் அறிய
Advertisement
நீதிமன்றத்திலிருந்து தப்பி கதற விட்ட கைதி... மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் வர காரணம் இது தான்!
காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பி ஓடியதாக கருதப்பட்டவர் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் சரண், ஜமீன்தாரரை அழைத்துவர சென்றதாக தகவல்.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவன் பத்மநாபன்,பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட பத்மநாபன்,குற்ற விசாரணை முறிவு சட்டம் 110 பிரிவின் கீழ் நன்னடத்தை பிணையில் விடுவிக்க போலீசாரிடம் விண்ணப்பித்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை 10.40 அளவில் காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்திற்கு அவரை போலீசார் அழைத்து வந்துள்ளனர். போலீஸ் பாதுகாப்போடு அழைத்து வந்த பத்மநாபன், நீதிமன்ற வளாகத்தில் இருந்து திடீரென மாயமானார். . திடீரென நடைபெற்ற இச்சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் இருந்த பொதுமக்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும்,என்ன நடந்தது என்றே தெரியாமல் திகைத்து நின்றனர். இதனால் காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் நன்னடத்தை பிணையில் விடுவிக்க 2 ஜாமீன்தாரர் தேவை என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் , நீதிமன்ற வளாகத்தின் பின்புறம் தனது வீடு உள்ள பிள்ளையார் பாளையம் பகுதிக்கு நீதிமன்ற வளாக சுற்றுச் சுவர் ஏறி குதித்து சென்றுள்ளார். இதனை தவறாக புரிந்துகொண்டு நீதிமன்ற வளாகத்தில் இருந்தவர்கள் கைதி தப்பி ஓடியதாக தெரிவித்ததன் பேரில் போலீசார் தேடியுள்ளனர். இந்நிலையில் குற்ற விசாரணை முறிவு சட்டம் 110 பிரிவின் கீழ் நன்னடத்தை பிணைக்கு 2 ஜாமீன்தாரர்களை தயார் செய்துகொண்டு பத்மநாபன் சிவகாஞ்சி காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.
காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பி ஓடியதாக கருதப்பட்டவர் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் சரண்.
— Kishore Ravi (@Kishoreoviya) September 13, 2021
CCTV FOOTAGE pic.twitter.com/ft6cVqF54h
இதைத்தொடர்ந்து நீதிமன்ற வளாகத்திலிருந்து கைதி தப்பியதாக கூறப்பட்ட நிகழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதால் போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர். நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பி ஓடியதாக கூறப்பட்ட பத்மநாபனை நன்னடத்தை பிணையில் விடுவிக்க சிவ காஞ்சி போலீசார், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியரிடம் அழைத்துச் சென்றனர்.
மேலும் தப்பி ஓடியதாக சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர், விசாரணையில் ஜமீன்தார் அவர்களை கூப்பிட தருவதற்காக தாம் சென்றதாகவும் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் சுதாகரிடம் , சிசிடிவி காட்சிகளை வைத்து பார்க்கும்போது தப்பிச் சென்றதாக தெரிந்தாலும், விசாரணையில் ஜாமீன்தாரர்களை கூப்பிட்டு சென்றதை அடுத்து காவல் துறையில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியரிடம் அழைத்துச்சென்றனர் என தெரிவித்தார்.
மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion