Crime: 3 வயது குழந்தையுடன் தாய் தற்கொலை - ஸ்ரீபெரும்புதூரில் அதிர்ச்சி
kanchipuram news: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கணவனின் தொல்லை தாங்க முடியாமல் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் (kanchipuram): காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீவளூர் கிராமத்தை சேர்ந்தவர் துளசி. இவர் இருங்காட்டு கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு சசிகலா என்பவருடன் திருமணம் நடைபெற்று 3 வயதில் தஷ்விகா என்ற ஒரு பெண் குழந்தையும், மெய் எழிலன் என்ற ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
கணவன் மனைவிக்கு சண்டை
மதுபோதைக்கு அடிமையான துளசி அவ்வப்போதும் மது அருந்திவிட்டு வந்து தன்னுடைய மனைவி சசிகலாவுடன் சண்டையிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு சுமார் 8 மணி அளவில் பாத்ரூமில், உள்ள வாலி கதவுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளதால் சசிகலா கோபத்துடன் துளசியிடம் சண்டையிட்டுள்ளார். அப்போது சசிகலாவுக்கும் துளசிக்கும் வாக்குவாதம் கடுமையாக ஏற்பட்டது.
தற்கொலை
துளசி எப்போதும் போல் நேற்று காலை இருங்காட்டுக்கோட்டையில் உள்ள கம்பெனிக்கு வேலைக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மனைவியும் தன்னுடைய மூன்று வயது பெண் குழந்தையும், இல்லாததைக் கண்டு அக்கம்பக்கம் தேடி வந்தார். அதே ஊரில் ஒதுக்குப்புறமாக உள்ள குளத்தில் சசிகலாவும் குழந்தை தஷ்விகாவும் நீரில் மிதந்ததைக் கண்டு அதிர்சியுற்று துளசி அவர்கள் இருவரையும் மீட்டு சவிதா மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார்.
வழக்கு பதிவு செய்து விசாரணை
அவர்கள் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் இறந்து போனதை உறுதி செய்தனர். சம்பவத்தை கேள்விப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்கள். குடித்துவிட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்த கணவனின் தொல்லை தாங்க முடியாமல் முடியாமல் திருமணமான நான்கே வருடத்தில் மனைவி சசிகலாவும், மூன்று வயது உடைய பெண் குழந்தை தஷ்விகாவும் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் , பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Suicidal Trigger Warning.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)