Kalyani Deshpande: 30 வருடங்களாக பாலியல் தொழில் மோசடி, பல்வேறு குற்ற சம்பங்களில் ஈடுபட்ட கல்யாணிக்கு சிறை...யார் இவர்?
மிகப் பெரிய நெட்வொர்க் வைத்து, பாலியல் மோசடி மற்றும் பல குற்ற சம்பங்களில் ஈடுப்பட்ட கல்யாணி என்பவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாலியல் தொழில் மற்றும் பல்வேறு குற்ற சம்பவங்கள் மூலம் பெரும் செல்வந்தரான கல்யாணி தேஷ்பாண்டே உள்ளிட்ட இருவருக்கு, ஏழு ஆண்டுகள் சிறை மற்றும் ரூ .10 லட்சம் அபராதம் விதித்து புனேவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர் குற்ற செயல்கள்:
மும்பையில் உள்ள சாதாரண குடும்பத்தில் பிறந்த கல்யாணி என்பவர், காலப்போக்கில் புனேவில் ஒரு டாப் பிம்பமாக மாறினார். இவர் மீது சுமார் 24 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கல்யாணி, புனேவின் சூஸ் பகுதியில் உள்ள தனது பங்களாவில் இருந்து 'வீனஸ் எஸ்கார்ட்ஸ்' என்ற எஸ்கார்ட் ஏஜென்சியை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த பங்களாவில் பாலியல் வர்த்தகம் மற்றும் குற்ற சம்பங்களுக்கு பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2007 ஆம் ஆண்டு, கல்யாணியின் நெருங்கிய உதவியாளரான அனில் தோலே, இந்த பங்களாவில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இவர், விபச்சாரத்திற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து பெண்களை அழைத்து வரும் வேலையை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், அவர் புனே மற்றும் பிற பகுதிகளில் விபச்சாரத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மற்றும் வெளிநாட்டிலிருந்து சிறுமிகளை கொண்டு வந்து பாலியல் தொழில் ஈடுபட வைத்ததாக கூறப்படுகிறது. இவருக்கு பெரும் செல்வந்தர்களுடன் தொடர்பு இருப்பதாகவும், அவர்களை வைத்து பாலியல் தொழிலில் அதிகம் சம்பாதித்தாதாகவும் கூறப்படுகிறது.
கல்யாணி குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், பாலியல் தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடர்பாக, முதன் முதலில் 2005 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், பின் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
ஆனால், இவர் 1990 ஆம் ஆண்டு முதலே பாலியல் தொழில் வர்த்தகம் மற்றும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
Sex-racket gangster Kalyani Deshpande sentenced to 7-years Rigorous Imprisonment for forcing innocent girls into flesh-trade. Woman Investigating Officer Radhika Phadke gets kudos. pic.twitter.com/fYWM308ANg
— $8 (@TIME_Asia_India) December 20, 2022
7 ஆண்டு சிறை:
இந்நிலையில் விபச்சாரம் மற்றும் தொடர் குற்றங்களில் ஈடுபட்டதாக கல்யாணி தேஷ்பாண்டே உள்ளிட்ட இருவருக்கு புனேவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ .10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
கல்யாணி தேஷ்பாண்டே மீது 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், அரசு சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரினார். பாலியல் மோசடி வழக்கில் புனேவில் எம்.சி.ஓ.சி.ஏவின் கீழ் எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கை இதுவாகும் என கூறப்படுகிறது.