மேலும் அறிய

Crime : கர்நாடகாவில் கொடூரம்...4-ஆம் வகுப்பு மாணவனை பால்கனியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த ஆசிரியர்.. என்ன நடந்தது?

கர்நாடகாவில் 4-ஆம் வகுப்பு படித்து வந்த 10 வயது சிறுவனை ஆசிரியர் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹாக்லி என்ற கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப்  பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்த பாரத் என்ற மாணவனை அவனது ஆசிரியர் முத்தப்பா மண்வெட்டியால் கடுமையாக தாக்கி உள்ளார். அப்போது ஆத்திரம் குறையாத  அவர், மாணவனை முதல் மாடியின் பால்கனியில் இருந்து கீழே தள்ளி உள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த மாணவன் பாரத் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவனின் தாயார் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்று வருகிறார். அவரையும் ஆசிரியர் முத்தப்பா கடுமையாக தாக்கி உள்ளார். இதில் காயமடைந்த ஆசிரியை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.  மாணவனை தாக்கிய ஆசிரியர் முத்தப்பாவை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கொலைக்கான காரணம் குறித்து உறுதியான  தகவலும் வெளியாகவில்லை. அவர்களின் குடும்பங்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும், தலைமறைவாக உள்ள ஆசிரியரை தேட ஒரு குழு அமைக்கப்பட்டது என்று போலீசார் கூறியதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

டெல்லியிலும் கொடூரம்

தலைநகர் டெல்லியில் 5ம் வகுப்பு பயிலும் சிறுமியை ஆசிரியை ஒருவர் முதல் மாடியிலிருந்த வகுப்பின் ஜன்னல் வழியாக வீசி எறிந்துள்ளார். இந்த சம்பவம் நாட்டையே அதிர்சியில் உறைய வைத்துள்ளது. டெல்லியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதனை செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 நிகார் நிகாம் பாலிகா வித்யாலயா பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி வந்தனா. இவர் வழக்கம் போல் வகுப்பறையில் இருந்துள்ளார். அப்போது ஆசிரியர் கீதா தேஷ்வால் வந்தனாவை தாக்கியுள்ளார். கத்தரிக்கோலால் மாணவியை அவரை தாக்கியுள்ளார். பின்னர் அவர் வந்தனாவை வகுப்பறையில் இருந்த ஜன்னல் வழியாக கீழே வீசியுள்ளார். கீதாவை தடுக்க ரியா என்ற ஆசிரியர் எவ்வளவு முயன்றுள்ளார். ஆனால் கீதா அந்த குழந்தையை ஈவு இரக்கமின்றி ஜன்னல் வழியாக தூக்கி வீசியுள்ளார்.

இதனைப் பார்த்து சக குழந்தைகள் அதிர்ச்சியில் உறைந்தனர். பள்ளிக்கு வெளியே இருந்தவர்கள் குழந்தை கீழே விழுவதைப் பார்த்து அதிர்ந்து போயுள்ளனர். பின்னர் சம்பவம் தொடர்பாக எங்களுக்கு புகார் வந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று நாங்கள் கீதாவை கைது செய்தோம். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. எந்தச் சூழலில் எதற்காக அவர் இந்த கொடூர செயலை செய்தார் என்று இன்னும் உறுதியாகவில்லை என்றார். சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிகிறது என்று தெரிவித்துள்ளது. டெல்லி மத்திய பகுதி துணை ஆணையர் ஸ்வேதா சவுஹான் இந்த வழக்கை குழு அமைத்து விசாரித்து வருகிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
Embed widget