மேலும் அறிய

அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: கைதான 6 பேருக்கு 2 ம் தேதி வரை நீதிமன்ற காவல்

அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தில் கைது செய்யபட்ட நிர்வாகி உட்பட 6 பேரை 2 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு

விழுப்புரம்: குண்டலப்புலியூர் அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தில் கைது செய்யபட்ட நிர்வாகி ஜீபின் பேபி, மரியா, சதீஷ்குமார் ஆகிய மூவரை 2 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலிலும், பணியாளர்கள்  பிஜீமோகன், கோபிநாத்,அய்யப்பன் ஆகிய மூவரை 28 ஆம் தேதி வரை நீதிமன்ற  காவலில்  வைக்க நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார். 

விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே உள்ள குண்டலபுலியூரில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, 15க்கும் மேற்பட்டோர் காணாமல் போனது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வெளியானதால் அன்பு ஜோதி ஆசிரம நிர்வாகி ஜுபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின் மற்றும் ஆசிரம பணியாளர்கள் என 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து இவ்வழக்கு சிபிசிஐடி மாற்றப்பட்டு சிபிசி ஐ டி  போலீசார் விசாரனை செய்து வரும் நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 8 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க கோரி  விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி புஷ்பராணி, ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 8 பேரையும் 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தார்.

அதன் படி 8 பேரையும் சிபி சி ஐ டி போலீசார் 25 ஆம் தேதி விசாரனை செய்த போது முத்துமாரி, பூபாலன் மனநலம் பாதிப்பில் உள்ளதாகவும் இருவருக்கும் சிகிச்சை அளிக்க உத்தரவு வழங்க வேண்டுமென கேட்டிருந்தனர். அதன் படி கடந்த் 25ஆம்  தேதி இருவரும் முண்டியம்பாக்கம்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு ஆசிரம நிர்வாகி ஜீபின் பேபி அவரது மனைவி மரியா ஜீபின் பணியாளர்கள் சதீஷ், கோபிநாத், அய்யப்பன், பிஜீமோகன் ஆகியோரிடம் விசாரனை நடத்தினர். நாளையுடன் விசாரனை முடிய உள்ள நிலையில் இன்றே விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆறு பேரை சிபிசி ஐ டி போலீசார் ஆஜர் படுத்தினர். அப்போது நீதிபதி புஷ்பராணி ஆஜர்படுத்தப்பட்ட  ஜீபின் பேபி மரியா சதீஷ்குமார் ஆகிய மூவரை 2 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலிலும் பணியாளர்கள்  பிஜீமோகன், கோபிநாத், அய்யப்பன் ஆகிய மூவரை 28 ஆம் தேதி வரை நீதிமன்ற  காவலில்  வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

என்ன செய்ய வேண்டும்? 

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK - AMMK: 10 தொகுதிகள் கேட்கும் தினகரன்.. கேட்கும் இடங்கள் தருவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK - AMMK: 10 தொகுதிகள் கேட்கும் தினகரன்.. கேட்கும் இடங்கள் தருவாரா எடப்பாடி பழனிசாமி?
TVK Vijay: “பாதுகாப்பின் அடையாளம் விசில்“; தவெக தலைவர் விஜய் அறிக்கை; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
“பாதுகாப்பின் அடையாளம் விசில்“; தவெக தலைவர் விஜய் அறிக்கை; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
TVK Whistle: இணையத்தில் ஒரே விசில் சத்தம்.. சிதறவிடும் தவெக - ஆர்ப்பரிக்கும் விஜய் ரசிகர்கள்!
TVK Whistle: இணையத்தில் ஒரே விசில் சத்தம்.. சிதறவிடும் தவெக - ஆர்ப்பரிக்கும் விஜய் ரசிகர்கள்!
இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணுக்கு நிர்வாணப் படம் கேட்டு ஆபாச மிரட்டல் !! இளைஞர் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணுக்கு நிர்வாணப் படம் கேட்டு ஆபாச மிரட்டல் !! இளைஞர் கைது
ABP Premium

வீடியோ

”விசில் போடு...” TVK கேட்ட அதே சின்னம் நிறைவேறிய விஜய்யின் ஆசை
அதெப்படி திமிங்கலம்..! கால்வாய்க்கு கொசுவலை சென்னை மாநகராட்சி NEW IDEA
கேரளாவை உலுக்கிய தற்கொலை தலைமறைவான ஷிம்ஜிதா தேடுதல் வேட்டையில் போலீஸ்
அதிமுகவில் காளியம்மாள்? நாகை MLA சீட் டிக் அடித்த EPS
”MUSLIM மட்டுமா ஹிஜாப் போடுறோம்?வடமாநில பெண்களும் போடுறாங்க”பெண் கவுன்சிலர் பதிலடி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK - AMMK: 10 தொகுதிகள் கேட்கும் தினகரன்.. கேட்கும் இடங்கள் தருவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK - AMMK: 10 தொகுதிகள் கேட்கும் தினகரன்.. கேட்கும் இடங்கள் தருவாரா எடப்பாடி பழனிசாமி?
TVK Vijay: “பாதுகாப்பின் அடையாளம் விசில்“; தவெக தலைவர் விஜய் அறிக்கை; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
“பாதுகாப்பின் அடையாளம் விசில்“; தவெக தலைவர் விஜய் அறிக்கை; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
TVK Whistle: இணையத்தில் ஒரே விசில் சத்தம்.. சிதறவிடும் தவெக - ஆர்ப்பரிக்கும் விஜய் ரசிகர்கள்!
TVK Whistle: இணையத்தில் ஒரே விசில் சத்தம்.. சிதறவிடும் தவெக - ஆர்ப்பரிக்கும் விஜய் ரசிகர்கள்!
இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணுக்கு நிர்வாணப் படம் கேட்டு ஆபாச மிரட்டல் !! இளைஞர் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணுக்கு நிர்வாணப் படம் கேட்டு ஆபாச மிரட்டல் !! இளைஞர் கைது
TVK Symbol: விஜய்க்கு விசில் சின்னம்.. டிவிகே-விற்கு விசில் போடுவார்களா மக்கள்?
TVK Symbol: விஜய்க்கு விசில் சின்னம்.. டிவிகே-விற்கு விசில் போடுவார்களா மக்கள்?
Dmdk Premalatha : மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள் என்ன.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள்.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
Affordable Sedans Cars India: டாடா டிகோர் முதல் மாருதி டிசையர் வரை; மலிவான, தரமான செடான் கார்கள் லிஸ்ட்; பார்த்து செலெக்ட் பண்ணுங்க
டாடா டிகோர் முதல் மாருதி டிசையர் வரை; மலிவான, தரமான செடான் கார்கள் லிஸ்ட்; பார்த்து செலெக்ட் பண்ணுங்க
Mankatha Re Release: தியேட்டரில் திருவிழா.. மங்காத்தா நாளை ரீ ரிலீஸ்.. அட்டகாசப்படுத்தும் அஜித் ரசிகர்கள்!
Mankatha Re Release: தியேட்டரில் திருவிழா.. மங்காத்தா நாளை ரீ ரிலீஸ்.. அட்டகாசப்படுத்தும் அஜித் ரசிகர்கள்!
Embed widget