Crime : 35 ஆண்டுகள்.. 48 நோயாளிகள் மீது பாலியல் வன்முறை.. ஸ்காட்லாந்தில் சிக்கிய இந்திய மருத்துவர்..
தனது குற்றங்களை ஒப்புக்கொள்ள மறுத்து, இந்தியாவில் தான் கற்றுக்கொண்ட சிகிச்சை முறைகளையே பின்பற்றியதாகவும், நோயாளிகள் அதை தவறாக புரிந்து கொண்டனர் என்றும் தெரிவித்திருக்கிறார் மருத்துவர்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 72 வயதான மருத்துவர் ஒருவர் கடந்த 35 ஆண்டுகளாக பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளது.
கிருஷ்ணா சிங் என்பவர், ஸ்காட்லாந்தில் குடிப்பெயர்ந்தவர். மருத்துவரான இவர், கடந்த 35 ஆண்டுகளாக தன்னை சந்திக்க வந்த 48 பெண் நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்திருக்கிறார். மருத்துவ பரிசோதனைக்காக வருபவர்களுக்கு முத்தம் கொடுப்பது, தவறாக தொடுவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார்.
இது குறித்து புகார் எழுந்திருக்கும் நிலையில், கிருஷ்ணா சிங் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தனது குற்றங்களை ஒப்புக்கொள்ள மறுத்த அவர் இந்தியாவில் தான் கற்றுக்கொண்ட சிகிச்சை முறைகளையே அவர் பின்பற்றியதாகவும், நோயாளிகள் அதை தவறாக புரிந்து கொண்டனர் என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஸ்காட்லாந்தில் இருந்து வெளியாகும் தகவலின்படி, 1983 பிப்ரவரி மாதம் முதல் 2018 மே மாதம் வரையிலான காலகட்டத்தில் ஏற்பட்ட சம்பவங்களின் அடிப்படையில் கிருஷ்ணா சிங் மீது புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்தில் மரியாதைக்குரிய நபராக பார்க்கப்படுபவர் கிருஷ்ணா சிங். தனது பல ஆண்டுகால அனுபவத்தால் மருத்துவ துறையில் சிறந்து விளங்கிய அவர்மீது கடந்த 2018-ம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையில், தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை மறுத்திருக்கிறார் கிருஷ்ணா சிங். எனினும், காவல் துறையினராலும் அவர்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றங்களை நிரூபிக்க முடியாததால் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சமவம் ஸ்காட்லாந்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிற முக்கியச் செய்திகள்:
#BREAKING | பீஸ்ட் படத்தினை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் - முதல்வருக்கு ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ கடிதம்https://t.co/wupaoCzH82 | #beast #BeastMovie #Tamilnadu #MKStalin #Jawahirullah pic.twitter.com/9kYJSaZEFP
— ABP Nadu (@abpnadu) April 15, 2022
Joe Root Steps Down: டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த ஜோ ரூட்..!https://t.co/LUE6Z3VmcJ#JoeRoot #Captain #TestMatch
— ABP Nadu (@abpnadu) April 15, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்