மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
சென்னையில் பயங்கரம் : 14 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தந்தை.. உடந்தையான சித்தியும் கைது..
பெற்ற தந்தையே மகளை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. இதற்கு மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார்.
![சென்னையில் பயங்கரம் : 14 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தந்தை.. உடந்தையான சித்தியும் கைது.. in chennai hocking incident where the adoptive father raped the daughter his wife was also complicit in this. சென்னையில் பயங்கரம் : 14 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தந்தை.. உடந்தையான சித்தியும் கைது..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/31/a54db7907167edffc17cf3d1a8a7ee90_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
குமாா்
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் மன அழுத்ததுடன், பேதலித்த அமர்ந்து இருந்த 14 வயது சிறுமியை பார்த்த காவல்துறையினர், அந்த சிறுமியிடம் விசாரித்தனர். அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் இருந்த நிலையில் மெரினா காவல்துறையினர் புதுவண்ணாரப்பேட்டையில் இருந்த தனியார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். காப்பகத்தில் சிறுமிக்கு உணவு கொடுத்தபோது சாப்பிடாமல் சோகத்துடன் காணப்பட்டுள்ளார்.
![சென்னையில் பயங்கரம் : 14 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தந்தை.. உடந்தையான சித்தியும் கைது..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/31/89fdbe5bc8f0cd6d422d22f31c75331f_original.jpg)
![சென்னையில் பயங்கரம் : 14 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தந்தை.. உடந்தையான சித்தியும் கைது..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/31/89fdbe5bc8f0cd6d422d22f31c75331f_original.jpg)
இதனால் காப்பகத்தில் இருந்தவர்கள் அந்த சிறுமியிடம் விசாரித்தனர். அப்போழுது செங்கல்பட்டு மாவட்டம் கரும்பாக்கத்தை சேர்ந்த குமாா் (வயது 40) இவருடைய மனைவி உயிரிழந்து 10 ஆண்டுகளான நிலையில், இரண்டாவது மனைவி கஸ்தூரி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.
கடந்த ஒரு மாத காலமாக தந்தை குமாா், இரண்டாவது மனைவி கஸ்தூரியின் உதவியுடன், தனது மகளை பாலியல் வன்புணா்வுக்கு ஆளாக்கியதாக அந்த சிறுமி வேதனையுடன் கூறியுள்ளார். சிறுமியின் வாக்குமூலத்தை கேட்டு அதிர்ந்த காப்பகத்தினர், இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் குழந்தை நல பாதுகாப்பு அமைப்பிற்கு தகவல் தெரிவித்தனர்.
![சென்னையில் பயங்கரம் : 14 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தந்தை.. உடந்தையான சித்தியும் கைது..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/31/a54db7907167edffc17cf3d1a8a7ee90_original.jpg)
இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் , திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகார் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம் விரைந்த போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமிக்கு அவரது தந்தை குமாா் மதுவை ஊற்றி கொடுத்து பலமுறை உடலுறவு கொண்டு துன்புறுத்தியது தெரியவந்தது. இதனை யாருக்கும் தெரிவிக்காமல் மறைத்துவந்த அவரது சித்தி கஸ்தூாி இருவா் மீதும் போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.
![சென்னையில் பயங்கரம் : 14 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தந்தை.. உடந்தையான சித்தியும் கைது..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/31/4db804ea43c8037bde0312796a64b7a0_original.jpg)
மேலும் இரவு நேரங்களில் சிறுமியை கட்டாயப்படுத்தி, சிறுமிக்கு குமாா் குளிா்பானத்தில் மதுவை ஊற்றிகொடுத்து பலமுறை உடலுறவு கொண்டு துன்புறுத்தியதும், தனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் குழந்தையை அடித்து உதைத்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தனது சித்தியிடம் பலமுறை தந்தையின் கொடுமைச் செயல்களை குறித்து எடுத்துகூறி சிறுமி அழுதுள்ளார். இருந்தும் குமாரின் இச்செயலை கண்டுகொள்ளாமல் இருந்து வந்துள்ளார் கஸ்தூரி.
![சென்னையில் பயங்கரம் : 14 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தந்தை.. உடந்தையான சித்தியும் கைது..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/29/5ca5e4bb17b7a3ea23daa634b8d45dee_original.jpg)
![சென்னையில் பயங்கரம் : 14 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தந்தை.. உடந்தையான சித்தியும் கைது..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/29/5ca5e4bb17b7a3ea23daa634b8d45dee_original.jpg)
இதன் காரணமாக சிறுமி மன உளைச்சல் ஏற்பட்டு, வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்துள்ளார். அப்போதுதான் காவல்துறையினர் சிறுமியை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி உள்ளனர். இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து சிறுமி வேறு காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். பெற்ற தந்தையே மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
க்ரைம்
தொழில்நுட்பம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion