மேலும் அறிய
Advertisement
உடற்பயிற்சி செய்யும் டம்புள்ஸால் மனைவி கொலை- மது அருந்துவதை தட்டிக்கேட்டதால் கணவன் வெறிச்செயல்
மது அருந்துவதை தட்டிக்கேட்ட மனைவியை உடற்பயிற்சி செய்யும் டம்புள்ஸைக் கொண்டு அடித்துக் கொன்று விட்டு பாம்பு கடித்ததாக கூறி நாடமாடிய ரவிக்குமாரை போலீசார் கைது செய்தனர்
மாமல்லபுரம் அருகே குடும்ப தகராறு காரணமாக உடற்பயிற்சி செய்யும் டம்புள்ஸை கொண்டு மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு பாம்பு கடித்து இறந்ததாக கூறி நாடகமாடிய போதை கணவரை போலீசார் கைது செய்தனர். மாமல்லபுரம் அடுத்த பையனூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ரவிக்குமார் தையற்காரராகவும், ரவிக்குமாரின் அக்காள் மகளும் அவரின் மனைவியுமான ஆனந்தி தனியார் கல்லூரி கேண்டீனிலும் வேலை செய்து வந்தனர். இந்த தம்பதிக்கு 16 வயதில் தமிழ்ச்செல்வி என்ற மகளும் 14 வயதில் தமிழ்ச்செல்வன் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் ரவிக்குமார் தினமும் குடித்துவிட்டு, தனது மனைவி ஆனந்தி உடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
ரவிக்குமார் நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு மது போதையில் வீட்டிற்கு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்து அடித்துள்ளார். அப்போது, இவர்களது மகன் தமிழ்ச்செல்வன் தந்தை ரவிக்குமாரின் செயலை தட்டிக்கேட்டு கண்டித்துள்ளார். பின்னர் இருவரும் சமாதானம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இரவு நேரத்தில் அனைவரும் படுத்து உறங்கிய நிலையில் ரவிக்குமார் அருகில் இருந்த உடற்பயிற்சி செய்யும் டம்புள்ஸை எடுத்து மனைவி ஆனந்தியின் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஆனந்தி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவி இறந்ததை தெரிந்து கொண்ட ரவிக்குமார் விடிந்ததும் தனது மனைவியின் நெற்றி, மூக்கு உள்ளிட்ட இடங்களில் பூச்சி மற்றும் பாம்பு கடித்து இறந்து விட்டதாக அருகில் உள்ள உறவினர்களிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து, பக்கத்து தெருவில் உள்ள ஆனந்தியின் தாய் தேவகிக்கு மகள் இறந்த தகவல் தெரிந்தது. அங்கு, வந்த அவர் தனது மகள் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து, தகவலறிந்த மாமல்லபுரம் டி.எஸ்.பி., குணசேகரன், ஆய்வாளர் நடராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியபோது தனது மனைவி ஆனந்தியை அடித்துக் கொலை செய்ததை காவல்துறையினர் மத்தியில் ஒப்புக்கொண்டுள்ளார்.
போலீசார், இறந்த ஆனந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், கொலையாளி ரவிக்குமாரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று கொலைக்கான காரணம் குறித்து மாமல்லபுரம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இது குறித்து, இறந்துபோன ஆனந்தியின் தாய் தேவகி கூறுகையில்,
’’எனது மகள் ஆனந்தியை, ரவிக்குமார் பல தடவை அடித்து துன்புறுத்தி உள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கூட ஆனந்தியை அடித்து துன்புறுத்தி, கத்தரிகோலால் குத்தி உள்ளார். ரவிக்குமார் தனது தம்பி என்ற முறையில் போக போக எல்லாம் சரி ஆகிவிடும் என நாங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டோம். அதன் விளைவுதான் தற்போது என் மகள் இறக்க காரணமாகி விட்டது’’ என்று கூறி கதறி அழுதார்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion