மேலும் அறிய
Advertisement
“வீடும் வேண்டாம்; சொத்தும் வேண்டாம்” - கடிதம் எழுதி வைத்துவிட்டு குடும்பத்துடன் ஆன்மீக பயணம்? போலீஸ் விசாரணை!
"எங்களை யாரும் தேட வேண்டாம் என டைரியில் எழுதியுள்ளது"
ஹீலிங் செய்வது
செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் ராதாநகர் 3வதுதெரு பகுதியில் வசித்து வருபவர், குணசேகரன்(40). இவர் திருச்சியை பூர்வீகமாக கொண்டவர். இவருக்கும் கடலூரை சேர்ந்த வசுமதி என்பவருக்கும் (33) திருமணமாகி இவர்களுக்கு அஜீத்குமார்(13) மித்தேஷ் (10) என இரண்டு மகன்களும் உள்ளனர். குணசேகரன் ஆன்லைனின் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வசுமதியின் தாய் தந்தை இறந்துவிட்டனர். வசுமதி ஒரே மகள் உடன்பிறந்தவர்கள் யாருமில்லை. அதனால் சில மாதங்களாக ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட வசுமதி ( ஹீலிங் செய்வது ) எப்போதும் ஆன்மீக சிந்தனையிலேயே இருந்து வந்துள்ளார். அதனை தொடர்ந்து கணவரையும் இரண்டு மகன்களையும், தன் வழிக்கு கொண்டு வந்துவிட்டார்.
வீட்டை பூட்டாமல் கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள்
இதற்கிடையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டாமல் கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் அனைத்து பொருட்களையும் அப்படியே விட்டு விட்டு நடந்தே எங்கோ சென்றுவிட்டனர். அக்கம்பக்கத்தினர் வெளியில் சென்ற குணசேகரன் குடும்பத்தினர் திரும்ப வரவில்லை. வீடு திறந்தபடியே உள்ளது என செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் அடிப்படையில் குணசேகரன் வீட்டுக்கு சென்ற தாலுகாபோலீசார் வீட்டை பூட்டி சாவியை எடுத்து சென்றுவிட்டனர். குணசேகரனின் சகோதரர் தொடர்ந்து குணசேகரன் மற்றும் அவரது மனைவிக்கு போன் பண்ணியும் எடுக்காததால் திம்மாவரத்தில் குணசேகரன் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீடு பூட்டியிருந்தது.
இனி எங்களுக்கு வீடு சொத்து ஆசை
அக்கம்பக்கத்தினர் நடந்த விஷயத்தை சொல்லியுள்ளனர். அதனை தொடர்ந்து தாலுகா போலீசார் முன்னிலையில் குணசேகரன் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது ஒரு டைரியில் வசுமதி கடிதம் எழுதி வைத்துள்ளது கிடைத்துள்ளது.
அதில் " இனி எங்களுக்கு வீடு, சொத்து ஆசை பாசம் " என எதுவும் வேண்டாம். ஆகையால் எங்களது இந்த வீடு கார் இருசக்கர வாகனம் என எங்களது அசையும் அசையா சொத்துக்களை அப்படியே விட்டு விட்டு நான் என் கணவர் மற்றும் எனது இரண்டு மகன்கள் ஆகிய நான்கு பேரும் குடும்பத்தோடு செல்கிறோம். கோயில் கோயிலாக சென்று மக்களிடம் காசு பணம் வாங்காமல், அருள்வாக்கு சொல்லி கோய்ல்களில் வழங்கும் பிரசாதத்தை சாப்பிட்டு அப்படியே எங்களுடைய வாழ்க்கையை நடத்த முடிவு செய்து சொத்துபத்துகளை விட்டு விட்டு நடைபயணமாக செல்கிறோம்.
எங்களை யாரும் தேட வேண்டாம்
எங்களை யாரும் தேட வேண்டாம்” என டைரியில் எழுதியுள்ளது. குணசேகரனின் குடும்பத்தை கண்டுபிடித்து தருமாறு சகோதரர் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நன்றாக வாழ்ந்துவந்த குடும்பம் ஆசாபாசத்நை துறந்து ஆன்மீகத்தை தேடி சென்ற சம்பவம் அப்பகுதியில், பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion