மேலும் அறிய
ஜாமினில் வெளிவந்த ஐஎஃப்எஸ் நிர்வாகி.. குவிந்த மக்கள்.. தற்கொலை முயற்சி.. அமலாக்கத்துறை விசாரணை..!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ஐஎஃப்எஸ் நிதி நிறுவன உதவியாளர் ஜெகன்நாதன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது
![ஜாமினில் வெளிவந்த ஐஎஃப்எஸ் நிர்வாகி.. குவிந்த மக்கள்.. தற்கொலை முயற்சி.. அமலாக்கத்துறை விசாரணை..! ifs scam ed search was conducted at the house of Jagannathan, an IFS financial institution assistant, near Arakkonam in Ranipet district ஜாமினில் வெளிவந்த ஐஎஃப்எஸ் நிர்வாகி.. குவிந்த மக்கள்.. தற்கொலை முயற்சி.. அமலாக்கத்துறை விசாரணை..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/03/c27fca7f62ef9818ad227a5954f97d761680543204172109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஜெகன் வீட்டு முன் குவிந்த மக்கள்
மற்றொரு மோசடி நிறுவனம்
வேலூர் மாவட்டம் காட்பாடியை தலைமை இடமாக கொண்டு பல்வேறு மாவட்டங்களில் கிளை அலுவலகங்களை ஆரம்பித்து கடந்த சில ஆண்டுகளாக ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. ஒரு லட்சம் ரூபாய்க்கு மாதம் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை அதிக வட்டி தருவதாக கூறி, ஆசை காட்டி பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் பல ஆயிரம் கோடிகளை மோசடி செய்தது. இதுதொடர்பாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து பலரை கைது செய்தனர்.
![ஜாமினில் வெளிவந்த ஐஎஃப்எஸ் நிர்வாகி.. குவிந்த மக்கள்.. தற்கொலை முயற்சி.. அமலாக்கத்துறை விசாரணை..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/03/352d4bcdb909bbc36522ba501bf7790a1680543099154109_original.jpg)
சிக்கி தவிக்கும் ஏஜெண்டுகள்
இந்நிலையில் ராணிப் பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட பனப்பாக்கம், மேலபுலம், சயனபுரம், அசநெல்லிகுப்பம், கீழ்வெங்கடா புரம், சேந்தமங்கலம், நாகவேடு உள்ளிட்ட பகுதிகளில் பல நபர்கள் ஐ.எப்.எஸ் ஏஜன்ட்களாக செயல்பட்டு பலகோடி ரூபாயை பொதுமக்களிடம் வசூல் செய்தனர். இதனைத்தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்துள்ள நெமிலி பகுதியை சேர்ந்த ஐ.எப்.எஸ் நிறுவனத்தில் முக்கிய நபராக திகழ்ந்து வந்த ஜெகன் என்கிற ஜெகந்நாதன் (36) என்பவரை மோசடி வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
![ஜாமினில் வெளிவந்த ஐஎஃப்எஸ் நிர்வாகி.. குவிந்த மக்கள்.. தற்கொலை முயற்சி.. அமலாக்கத்துறை விசாரணை..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/03/cb66712c545090b9f22d973b65c505841680543121287109_original.jpg)
வீட்டின் முன் குவிந்த மக்கள்
ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தின் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் உள்ள நிலையில் ஜெகந்நாதன் ஜாமீனில் வெளி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் நெமிலியில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு வந்ததாக தகவல் பரவிய நிலையில், சுற்றியுள்ள கிராமப்பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் ஜெகந்நாதன் வீட்டின் முன்பு குவிந்தனர்.
![ஜாமினில் வெளிவந்த ஐஎஃப்எஸ் நிர்வாகி.. குவிந்த மக்கள்.. தற்கொலை முயற்சி.. அமலாக்கத்துறை விசாரணை..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/03/69ea2cc3e94fc3faf207a7e102961a991680543153333109_original.jpg)
தற்கொலை செய்ய முயற்சி
அப்போது ஆவேசமடைந்த சயனபுரம் பகுதியை சேர்ந்த மோகன்(35), தீரன்(33) ஆகியோர் திடீரென தங்கள் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சி செய்தனர். அங்கிருந்தவர்கள் தடுத்து நெமிலி போலீசுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் தற்கொலைக்கு முயன்ற 2 பேர் மீது தண்ணீர் ஊற்றி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப்பின் அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
![ஜாமினில் வெளிவந்த ஐஎஃப்எஸ் நிர்வாகி.. குவிந்த மக்கள்.. தற்கொலை முயற்சி.. அமலாக்கத்துறை விசாரணை..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/03/4ad7e91cc68e9fc437f0770d77b5a9ca1680543174745109_original.jpg)
களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை
இந்த நிலையில் ஜெகநாதன் வீட்டில் அமலாக்க துறை சோதனை நடத்தினர். அமலாக்கத்துறை சோதனை செய்தலில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் அமலாக்கத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வணிகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion