'பல்லி'க்கு குறி வைக்கப்பட்ட துப்பாக்கி! காயமடைந்த சிறுவன்.. பதறவைத்த சம்பவம்!
அஸான் ஒரு பல்லியை சுட்டிக்காட்டி அஃப்சரை குறிவைக்கச் சொன்னார். அஃப்சர் பல்லியை நோக்கிச் சுட்டார்
!['பல்லி'க்கு குறி வைக்கப்பட்ட துப்பாக்கி! காயமடைந்த சிறுவன்.. பதறவைத்த சம்பவம்! Hyderabad: Minor at Moghalpura shot with air gun, case booked 'பல்லி'க்கு குறி வைக்கப்பட்ட துப்பாக்கி! காயமடைந்த சிறுவன்.. பதறவைத்த சம்பவம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/06/92b3311fa45648ab72584407bd10f4151659750196_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மைனர் சிறுவனை ஏர் கன் மூலம் சுட்டதாக 32 வயதான முகமது அப்துல் அஃப்சர் என்பவர் மீது அங்கே மொகல்புரா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த திங்கள் அன்று நடந்த சம்பவம் வெள்ளிக்கிழமை வெளிச்சத்திற்கு வந்த பின்னர் பாதிக்கப்பட்டவருக்கு காயம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. அஃப்சர் சுல்தான் ஷாஹி பகுதியில் வசிப்பவர். காயமடைந்த சிறுவன், எட்டு வயதான முகமது அசான் அஃப்சருடன் நின்று கொண்டிருந்துள்ளார்.
அஃப்சர் ஏர் துப்பாக்கியுடன் தெரு நாய்களைக் குறிவைத்துக்கொண்டிருந்துள்ளார். அந்த ஆயுதம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அபிட்ஸில் உள்ள ஒரு கடையில் இருந்து அப்சரின் சகோதரர் அப்துல் ரபீக் என்பவரால் வாங்கப்பட்டு வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
“அப்ஸர் ஒரு நாயின் மீது ஏர் கன் சுட்டுக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த அஸான் ஒரு பல்லியை சுட்டிக்காட்டி அஃப்சரை குறிவைக்கச் சொன்னார். அஃப்சர் பல்லியை நோக்கிச் சுட்டார், அதற்குப் பதிலாக அந்தத் துகள்கள் சுவரில் மோதி ஆசானை நோக்கித் திருப்பி அந்தச் சிறுவனைத் தாக்கியுள்ளது.இதை அடுத்து பாதிக்கப்பட்ட அந்தச் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது” என்று மொகல்புரா காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தவுடன், அசானின் உறவினர்கள் பகதூர்புராவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பிறகு சிகிச்சைக்குப் பிறகு அவர் வியாழக்கிழமை இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மொகல்புரா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற சம்பவம் ஐதராபாத்தில் இது முதன்முறை அல்ல. கடந்த மார்ச் மாதம் இப்படி ஏர் கன்னால் சுடப்பட்ட நான்கு வயது சிறுமி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே மற்றொரு அதிர்ச்சிகர சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
வீட்டில் பூஜை நடந்துகொண்டிருக்கும்போது திடீரென மூர்க்கமாக நடந்துகொண்ட 15 வயது சிறுமி வீட்டில் இருந்த வாளை எடுத்து தன்னுடைய உறவினரின் மகளின் தலையை வெட்டி வீசினார். இந்த ஷாக்கான சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினர் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஹாஸ்டலில் தங்கி படித்துகொண்டிருக்கும் அச்சிறுமி சில தினங்களுக்கு முன்புதான் வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டுக்கு வந்ததில் இருந்தே சிறுமியின் நடத்தையில் மாற்றம் இருந்துள்ளது. வழக்கமாக இல்லாமல் ஏதோ ஒருவித படபடப்புடனும், மூர்க்கத்தனத்துடனும் அவர் இருந்துள்ளார். இதற்கிடையே சிறுமியின் வீட்டில் அவரது உறவினர் பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். வீட்டில் நடக்கும் பூஜைக்கு சிறுமியின் உறவினர்களும் வருகை தந்துள்ளனர். பூஜை நடந்துகொண்டிருக்கும்போது திடீரென மூர்க்கமான அச்சிறுமி அருகில் இருந்த பெரிய வாளை அடுத்து அனைவரையும் வெட்ட முயற்சித்துள்ளார். என்ன நடக்கிறது என்றே புரியாத சிறுமியின் பெற்றோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அனைவரும் சுதாரித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர். ஆனால் வாளை கையில் எடுத்துகொண்டு பக்கத்து அறைக்குச் சென்ற சிறுமி அங்கு விளையாடிக்கொண்டிருந்த 9வயது சொந்தக்கார சிறுமியின் தலையை வெட்டி வீசினார். இதனை சற்றும் எதிர்பாராத குடும்பத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)