மேலும் அறிய

Crime: உலக்கையாலே அடித்துக் கொலை! மனைவியை கொன்று தற்கொலை செய்த கணவன் - தென்காசியில் சோகம்

தென்காசி அருகே மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவன், அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் கீழத்திருவேங்கடம் தெற்கு பாறைப்பட்டியை  சேர்ந்தவர் கருப்பசாமி (72). இவரது மனைவி சீதாலட்சுமி (65). இந்த தம்பதிகளுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் நான்கு பேருக்கும் திருமணம் முடிந்த நிலையில் சீதாலெட்சுமி மட்டும் தனியாக ஊரில் வசித்து வருகிறார். கணவர் கருப்பசாமி திருவேங்கடம் பகுதியில் கொத்தனாராக இதற்கு முன் வேலை பார்த்து வந்த நிலையில், வயது முதிர்வு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சென்னையில்  வாட்ச்மேனாக வேலை செய்து வருகிறார். அதோடு ஆறு  மாதத்திற்கு ஒரு முறை, வருடத்திற்கு ஒரு முறை ஊருக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி தற்போது ஊருக்கு வந்த நிலையில் நேற்று இரவு கணவன் மனைவி இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

உலக்கையால் அடித்துக் கொலை:

குறிப்பாக தனக்கு பிடிக்காத அக்கம் பக்கத்து உறவினர்களிடம் பேச கூடாது என கருப்பசாமி கூறி பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது. அதில் இருவருக்கும் பிரச்சினை முற்றவே ஒரு கட்டத்தில் வீட்டில் இருந்த உலக்கையை எடுத்து மனைவி சீதாலெட்சுமி மண்டையில் ஓங்கி அடித்துள்ளார். இரத்த வெள்ளத்தில் சீதாலெட்சுமி நிலைகுலைந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

தற்கொலை:

கோபத்தில் சற்றும் யோசிக்காமல்  மனைவியை கொலை செய்த கருப்பசாமி, அதன்பின்னர் தாயை கொலை செய்தது மகன்களுக்கு தெரிந்தால்  சும்மா விடமாட்டார்கள் என்ற பயத்தில் தானும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இரவில் இச்சம்பவம் நடந்தது யாருக்கும் தெரியாத நிலையில் காலையில் அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வந்துள்ளது. அதன்பின்னர் இது குறித்து திருவேங்கடம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதோடு அருகில் உள்ள மக்கள் அனைவரும் கருப்பசாமியின் வீட்டின் முன் குவிந்தனர். தொடர்ந்து அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கருப்பசாமியை மீட்ட காவல்துறையினர்  சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கருப்பசாமி சுய நினைவை இழந்து வருவதாக தெரிவித்த சற்று நேரத்தில் அவர் உயிரிழந்தார். 

மேலும் இறந்த சீதாலெட்சுமியின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர். கோபத்தில் மனைவியை கொலை செய்து விட்டு பின் மகன்கள் மீது உள்ள பயத்தில் கணவரும் தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

" சிறையில் இருந்து வந்த மறு நாளே கொடூரம் " - நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா ? மனைவியை கொன்ற ரவுடி
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Maruti 7 Seater: எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Embed widget