மேலும் அறிய
Advertisement
madurai | இரண்டு மாதம் ஆச்சு... இன்னும் கர்ப்பம் ஆகவில்லையா? மனைவியை கொலை செய்த கணவர்!
தன்னை வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு தொலைபேசியில் தாயிடம் கதறி அழுத மகளை பார்க்க வந்தபோது மகள் கொலை செய்யப்பட்டு கிடந்த பரிதாபம்.
மதுரை நியூ- எல்லீஸ் நகர் ஆர்.சி.சர்ச் தெரு பகுதியை சேர்ந்த நாகவேல் என்பவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு அலங்காநல்லூர் அருகேயுள்ள அய்யங்கோட்டை பகுதியை சேர்ந்த சுதா என்ற பெண்ணுடன் கடந்த நவம்பர் - 24ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.
#abpnadu | #crime |
— Arunchinna (@iamarunchinna) December 31, 2021
#madurai | #murder
மதுரையில் திருமணமான 2மாதத்தில் மனைவி கர்ப்பம் தரிக்கவில்லை என கூறி கொலை செய்த கணவன் - காவல்துறையினர் விசாரணை. தன்னை வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு தொலைபேசியில் தாயிடம் கதறி அழுத மகளை பார்க்க வந்தபோது மகள் கொலை செய்யப்பட்டு கிடந்த பரிதாபம்.
திருமணத்திற்கு பின்பும் நாகவேல் தனது தாய், தம்பி ஆகியோருடன் ஒரே வீட்டில் கீழ் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவி சுதா தன்னை விட வயது மூத்தவர் என கூறியும், திருமணமாகி 60 நாட்கள் ஆகியும் கர்ப்பம் தரிக்கவில்லை எனக் கூறியும் கடந்த ஒரு வாரமாக கணவர் நாகவேல் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நேற்று இரவு 8 மணியளவில் தனது தாய்க்கு செல்போனில் அழைத்த சுதா, கணவன் அதீத கோபத்தில் தன்னை அடிப்பதாகவும், கொலை செய்துவிடுவார் என பயமாக இருப்பதால் தன்னை வீட்டிற்கு அழைத்துச்செல்லுமாறும் கூறியதாக தெரிகிறது.
இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
இதனிடையே கணவன் மனைவியிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவன் நாகவேல் மனைவி சுதாவின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். மகளை அழைத்துசெல்வதற்காக மகளின் வீட்டிற்கு நேரில் வந்து பார்த்தபோது சுதா கொலை செய்யப்பட்டு சடலமாக கிடப்பதை பார்த்து அதிருந்து போன தாய் சுதா, காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
மனைவியை கொலை செய்ததாக கூறி எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்தில் கணவர் நாகவேல் சரண்டர் ஆகிய நிலையில் இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான இரண்டு மாதத்தில் மனைவி கர்ப்பம் ஆகவில்லை என கூறி கணவரே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
விளையாட்டு
அரசியல்
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion