மேலும் அறிய

Crime: கட்டாய கணவனுக்கு டாடா: காதலனுடன் குடும்பம் நடத்திய மனைவி: ஆத்திரத்தில் கொலை செய்த கணவர் கைது!

திருவள்ளூர் மாவட்டம் புழல் லட்சுமிபுரம் கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுதாசந்தர் என்ற 22 வயது இளைஞர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தனது மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத்திய காதலன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம் புழல் லட்சுமிபுரம் கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுதாசந்தர் என்ற 22 வயது இளைஞர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி இளம்பெண் ஒருவருடன் புழல் வினாயகபுரம் பகுதியில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த கும்பல் ஒன்று ஆட்டோவை மறித்து நிறுத்தியதோடு, சுதாசந்தருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் கத்தியால் அவரை பல இடங்களில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தில் சுதாசந்தர் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி தகவலறிந்த புழல் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சுதாசந்தர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். 

பின்னர் நடைபெற்ற விசாரணையில்  சுதாசந்தருடன் ஆட்டோவில் சென்றது ஆவடியை அடுத்த மோரை பகுதியை சேர்ந்த ராகிணி என்பது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அதாவது கடந்த 3 வருடங்களாக சுதாசந்தரும் ராகிணியும் காதலித்து வந்த நிலையில், ராகிணி வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒரு வருடத்திற்கு முன் ராகிணியை பெற்றோர்  வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து ராகிணி சுதாசந்தருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். 

இதுகுறித்து அறிந்த ராகிணியின் கணவர் வசந்த், அவரது அண்ணன்கள் ராகிணியை கண்டித்துள்ளனர். இதில் தகராறு ஏற்படவே ராகிணி ஒரு மாதத்திற்கு முன் வீட்டை விட்டு வெளியேறி சுதாசந்தருடன் சென்றுள்ளார். இருவரும் ரெட்டேரி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தது தெரிய வந்தது. மேலும் சுதாசந்தரை ராகிணியின் கணவர் திட்டமிட்டு கொலை செய்தது கண்டறியப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் கார்த்திக், பரத். உதயா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ராகிணியின் கணவர் வசந்த், அவரது தந்தை வாசுதேவன் இருவரும் 10 நாட்களாக தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று மாலை அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

தலைப்பு செய்திகள்

காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Embed widget