மேலும் அறிய
Advertisement
ஓ.எம்.ஆர் சாலையில் வேகமாக பறந்த கார் விபத்து..! ஐ.டி. பெண் ஊழியர் பரிதாப உயிரிழப்பு..! 3 பேர் படுகாயம்..
ஓ.எம்.ஆர். சாலையில் கார் ஐ.டி.யில் பணியாற்றிய பெண் ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா காட்சி போன்று
சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் கிருத்திகா (26) ஸ்ரீதர்(29) அபிஷா (26) மற்றும் இவர்களது நண்பரான பங்கஜ்(18) ஆகிய நான்கு பேர் துரைப்பாக்கம்-பல்லாவரம் ரேடியல் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர். சென்னை கொரட்டூரை சேர்ந்த ஸ்ரீதர் (29) காரை வேகமாக இயக்கியதாக கூறப்படுகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவற்றில், மோதி சினிமா காட்சியில் வருவதை போல கார் பல பல்ட்டி அடித்து விபத்துக்குள்ளானதில் கார் அப்பளம் போல் நொறுங்கியுள்ளது.
சம்பவ இடத்திலேயே..
விபத்துக்குள்ளானதும் காரின் பின் கதவு திறந்து பின்னால் அமர்ந்திருந்த கிருத்திகா சாலையில் விழுந்து, பின்னர் சதுப்பு நிலத்தில் விழுந்துள்ளார். தகவல் அறிந்த பள்ளிக்கரணை போலீசார் மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சதுப்பு நிலத்தில் விழுந்த கிருத்திகாவை மீட்டு பரிசோதித்ததில் சம்பவ இடத்திலேயே ஐடி பெண் ஊழியர் கிருத்திகா உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
காரின் முன் பகுதியில் இரண்டு ஏர்பேக் ஓபன் ஆனதால், ஸ்ரீதர், பங்கஜ் இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அதேபோல் பின்னால் அமர்ந்திருந்த மற்றொரு நபர் அபிஷா காரின் உள்ளே சிக்கிக் கொண்டு படுகாயம் அடைந்தார். விபத்துக்குள்ளான மூன்று பேரை மீட்டு அருகில் உள்ள பல்லாவரம் (தனியார் மருத்துவமனை) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மது போதையில்..?
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த கிருத்திகா பொள்ளாச்சியை சேர்ந்தவர் என்பதும், துரைப்பாக்கத்தில் உள்ள மகளிர் விடுதி ஒன்றில் தங்கி, ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். உயிரிழந்த கிருத்திகாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அப்பளம் போல் நோறுங்கிய காரை பறிமுதல் செய்து கார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் இந்த விபத்து ஏற்பட்டதா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion