Heroin seized in Gujarat: குஜராத்தில் 1500 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்.. அதிர்ச்சி பின்னணி என்ன?
போதைப்பொருள் அடங்கிய பேக்கேஜ், ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் வழியாக குஜராத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து சுமார் 1500 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பொருளின் எடை கிட்டத்தட்ட 260 கிலோ இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் போதை பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த உளவுத்துறையின் தகவலின்படி, குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் (ஏடிஎஸ்), வருவாய் புலனாய்வு இயக்குனரஜம் (டிஆர்ஐ) சேர்ந்து சோதனையில் ஈடுபட்டது.
இதில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், 1500 கோடி ரூபாய் மதிப்பிலான 260 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருள் அடங்கிய பேக்கேஜ், ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் வழியாக குஜராத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சமீப காலமாக குஜராத் வழியாகவே அதிக அளவிலான போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக புகார் எழுந்திருக்கிறது. குஜராத் வந்தடையும் இந்த போதைப் பொருட்கள், உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் கடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சோதனையில், குஜராத் கடல் பகுதிகளில் இருந்து மட்டும் 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் குஜராத் துறைமுகத்தில் அதிக அளவிலான போதைப் பொருட்கள் கைப்பற்றி இருப்பது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. போதைப் பொருட்கள் கடத்தலின் புகலிடமாக குஜராத் மாறி இருப்பதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக நேற்று காலை இந்தியா வந்தடைந்தார். இந்தியாவின் குஜராத் மாநிலத்திற்கு வந்தடைந்த அவர் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றார். அங்கு சென்று ஆசிரமத்தை பார்வையிட்ட அவர், அங்கிருந்த ராட்டை சுற்றினார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிற முக்கியச் செய்திகள்:
TN Assembly Live | தமிழ்நாடு சட்டப்பேரவை கேள்வி நேரம்.. காரசார விவாதம் - நேரலை! | CM MK Stalin https://t.co/s8oI0kC29f
— ABP Nadu (@abpnadu) April 22, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்