சிறுமி சடலத்துடன் உடலுறவு... காமக் கொடூரர்களுக்கு மரண தண்டனை அளித்த நீதிமன்றம்..!
குழந்தை மீதான இத்தகைய மனிதாபிமானமற்ற" தாக்குதல் சமூகத்தின் தார்மீக இழைகளை பாதித்தது என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
அரியானாவில் 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த இருவருக்கு பானிபட் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அரியானவின் மட்லாடாவில் உள்ள பானிபட்டின் உர்லானா கிராமத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றத்திற்காக பிரதீப் மற்றும் சாகர் ஆகிய இருவருக்கும் பானிபட் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பானிபட் நீதிமன்றம் மரண தண்டனை விதிப்பது இதுவே முதல் முறை ஆகும்.
குழந்தை மீதான இத்தகைய மனிதாபிமானமற்ற தாக்குதல் சமூகத்தின் மீதான நல்ல பண்புகளை பாதித்துள்ளது என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
"குற்றவாளிகள் இவ்வளவு இளமைப் பருவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமல்லாமல், தண்டனையிலிருந்து தப்பிக்க சிறுமியின் சால்வையைப் பயன்படுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்தனர். சமூகம் மற்றும் மனிதகுலத்தின் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய குற்றத்தின் கொடூரமான தன்மை, குற்றவாளிகள், பாதிக்கப்பட்ட பெண்ணைக் கொன்றுவிட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணின் சடலத்தின் மீது மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ததில் இருந்து வெளிப்படுகிறது. எந்த சிறிய தண்டனையும் பாதிக்கப்பட்டவருக்கும் அவரது குடும்பத்திற்கும் மட்டுமல்ல, சமூகத்திற்கும் கடுமையான அநீதியை ஏற்படுத்தும்” என்று கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சுமித் கார்க் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
மரணமடைந்த சிறுமி, தனது தாய்வழி தாத்தா பாட்டியுடன் வசித்து வந்தார். சிறுமி, கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி 2018 அன்று மாலை குப்பையை வீசச் சென்றதாகவும், திரும்பி வரவில்லை என்றும் அவருடைய மாமா கூறினார். சிறுமியை கண்டுபிடிக்க முடியாததால் குடும்பத்தினர் காணாமல் போனவர் குறித்து புகார் அளித்தனர்.
சந்தேகத்தின் பேரில் இருந்த இருவரையும் அன்றைய தினமே போலீசார் கைது செய்தனர். அவர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்ததை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். சிறுமி இறந்த பிறகும் அவர்கள் இறந்த உடலை பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் சிறுமியை குளத்தில் வீசியதையும் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்