மேலும் அறிய

Crime: 8 வயது மகளை கழுத்து அறுத்து கொலை செய்து பேராசிரியர் தற்கொலை! பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியரும், அவரது மகளும் சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: ஹரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியரும், அவரது மகளும் சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஹரியானா பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி:

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தீப் கோயால் (35). இவர் ஹிசாரில் உள்ள லாலா லஜ்பத் ராய் கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2016ஆம் ஆண்டு முதல் பேராசிரியராக வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் தனது 8 வயது மகளை ஸ்கூட்டரில் அழைத்து சென்றிருக்கிறார்.

வெளியில் அழைத்து செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றிருக்கிறார். தனது மகளுடன் சந்தீப் கோயால் வெளியே சென்று நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால், அவரது மனைவி பலமுறை அவரை தொடர்பு கொண்டிருக்கிறார். அதற்கு பதலளிக்காததால், மனைவி அவர்களை தேடி பல்கலைக்கழகத்திற்கு விரைந்துள்ளார். 

பல்கலைக்கழகத்திற்கு வெளியே கணவர் ஸ்கூட்டர் இருப்பதையும் பார்த்திருக்கிறார். இதனை அடுத்து, பல்கலைக்கழகத்தில் கணவரின் அலுவலக அறைக்கு சென்ற பார்த்தபோது, குழந்தை மற்றும் கணவர் சடலமாக கிடந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி, உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். 

மகளை கொன்ற தந்தை:

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரண்டு பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.  இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. 

அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் கத்தியால் சந்தீப் கோயல் தனது எட்டு வயது மகளின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, அதே கத்தியால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.  இதுகுறித்து போலீசார் கூறுகையில், "சந்தீப் கோயால் கடும் மன உளைச்சலில் இருந்ததாக அவரின் நண்பர்கள் கூறுகின்றனர். இதற்காக சந்தீப் கோயால் சிகிச்சை பெற்று வருவதகாவும் நண்பர்கள் கூறுகின்றனர்.

நாங்கள் அனைவரையும் விசாரித்து வருகிறோம். சந்தீப் கோயாலின் குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவரையும் விசாரித்து வருகிறோம். இரண்டு பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைனக்கு அனுப்பப்பட்டுள்ளது" என்றார். 8 வயது மகளை கழுத்து அறுத்து கொலை செய்துவிட்டு, தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை,

ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

தலைப்பு செய்திகள்

45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Wagon R CNG Real Milage: ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
Scorpio N Facelift on EMI: ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Embed widget