குடும்பத்தினர் 4 பேரை சுட்டுக்கொன்ற ஒரே மகன்.. ஹரியானாவில் அதிர்ச்சி!
ஹரியானாவில் பெற்றோரைக் கொலை செய்தது மகன் தான் சிசிடிவி மூலம் கண்டறிந்த போலீசார் அவரைக் கைது செய்தனர்
ஹரியானாவில் பெற்றோர், சகோதரி மற்றும் பாட்டியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற 20 வயது இளைஞனை போலீசார் கைது செய்தனர். சொத்துப்பிரச்சனையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதாக என தீவிர விசாரணையிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
ஹரியானா மாநிலம் ரோஹ்டக் மாவட்டத்தில் உள்ள விஜய நகர் பகுதியில் வசித்து வருகிறார் நில வியாபாரி பிரதீப் மாலீக். இவருடன் அவரது மனைவி பாப்லி தேவி, தாய் ரோஷ்னி தேவி மற்றும் 20 வயதான மகன் அபிஷேக் மற்றும்17 வயதான மகள் நேகா உள்ளிட்டோர் வசித்துவந்தனர். கடந்த 27 ஆம் தேதி அபிஷேக் என்பவரை தவிர மற்ற அனைவரும் துப்பாக்கி சூட்டின் காரணமாக உயிரிழந்துள்ளனர். இதில் 17 வயதான நேகா என்பவர் மட்டும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட இரண்டு நாள் பின் உயிரிழந்துவிட்டார். இச்சம்வம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 4பேரை யார் கொலை செய்திருப்பார்கள்? காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தியப்போது தான் கிடைத்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த 4 பேரைக்கொலை செய்தது வேறு யாரும் இல்லை. உயிரிழந்த பிரதீப் மாலீக்கின்20 வயதான மகன் அபிஷேக் தான் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தியப்போது, பல நாள்களாக சொத்து பிரச்சனை ஏற்பட்டு வந்ததாகவும், பணம் கேட்டும் குடும்பத்தினர் கொடுக்க மறுத்ததாகத் தெரிவித்தார். இதன் காரணமாக ஆத்திரத்தில் துப்பாக்கியால் அனைவரையும் சுட்டுக்கொன்றுவிட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் விசாரணையின் போது, பெற்றோர், சகோதரி மற்றும் பாட்டி ஆகிய 4 பேரை கொலைச்செய்துவிட்டு ஹோட்டலில் தங்கியுள்ளார். பின்னர் எதுவும் தெரியாதது போல், வீட்டிற்கு வந்த அவர், பல முறை கதவினைத் தட்டியும் யாரும் திறக்கவில்லை. பின்னர் அவருடைய தாய்மாமாவுக்கு போன் செய்து வீட்டில் யாரும் கதவினைத்திறக்கவில்லை என தெரிவித்த ப்போது கதவை உடைத்திறந்து பார்க்குமாறு அவர் கூறியுள்ளார். அதன்பிறகு அவர் தனது மாமாவிடம் வீட்டில் அனைவரும் துப்பாக்கிச்சூட்டின் காரணமாக உயிரிழந்துவிட்டதாகவும், தங்கை மட்டும் உயிருக்குப்போராடிய நிலையில் அவரை மருத்துவமனையில் அனுமதித்ததாக கூறியிருக்கிறார்.
இதனையடுத்து தகவலறிந்த போலீசார், சம்ப இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்திய போது, குற்றவாளியான அபிஷேக் பல்வேறு தகவல்கள மாற்றி மாற்றிக்கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர் தங்கியிருந்த பகுதியில் உள்ள மக்களிடம் விசாரணை நடத்தியதோடு மட்டுமல்லாமல் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை எடுத்தும் ஆய்வு நடத்தினர். இதில் அபிஷேக் தான் குற்றவாளி என நிரூபணமாகியுள்ளது. இதனையடுத்து ரோஹ்டக் மாவட்ட கண்காணிப்பாளர் அபிஷேக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் பெற்றோர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதுக்கு சொத்துபிரச்சனையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? எனவும் போலீசார் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.