Crime: கரூர் மாவட்டத்தில் குட்கா, மது பாட்டில், லாட்டரி விற்றவர்கள் கைது
கரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபானங்களை விற்றதாக ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர்.
மது விற்ற 9 பேர் கைது.
கரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபானங்களை விற்றதாக ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா உள்ளிட்ட போலீசார் அரவக்குறிச்சி, மாயனூர், லாலாபேட்டை, தோகைமலை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்றதாக தனபால் வயது 48, தங்கவேல் வயது 59, கார்த்திகேயன் வயது 52, முத்துசாமி வயது 53, கிருஷ்ணராயபுரம் மலையப்பா காலனியை சேர்ந்த பிரபு வயது 41, பஞ்சப்பட்டி கீரனூர் மெயின் ரோடு பகுதி சேர்ந்த மலர் வயது 42, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த சதீஷ் வயது 34, சுந்தரம் வயது 57, தோகைமலை அருகே ஆர்ச்சம்பட்டி பகுதியில் வீட்டின் பின்புறம் வைத்து மது விற்றதாக அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் வயது 43 ஆகிய 9 பேரை தோகை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 59 மது பாட்டில்கள் 2 லிட்டர்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
குட்கா விற்ற 4 பேர் சிக்கினர்.
கரூர் மாவட்டம், தாந்தோணிமலை போலீஸ் எஸ்ஐக்கல் தமிழ்ச்செல்வன், நாகராஜன் உள்ளிட்ட போலீசார் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்களை விற்றதாக காக்காவடியை சேர்ந்த விவேக் வயது 30, திருமாநிலையூர் நவீன் வயது 25, சுங்ககேட் நிர்மலா வயது 75, முத்து கவுண்டன் புதூர் சந்திரசேகரன் வயது 58 ஆகிய நான்கு பேரை தான்தோன்றிமலை போலீசார் கைது செய்தனர்.
லாட்டரி விற்றவர் கைது
தாந்தோணி மலை அருகே லாட்டரி சீட்டுகளை விட்ட நபரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் தாந்தோணிமலை போலீஸ் நாகராஜன் உள்ளிட்ட போலீசார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விட்டதாக ராமச்சந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் வயது 38 என்பவரை தான் தோன்றி மலை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
கரூர் மாவட்டத்தில் 59 மது பாட்டில்கள் பறிமுதல் ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு
கரூர் மாவட்டத்தில் அனுமதி இன்றி கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்ததாக ஒன்பது பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் 90-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. 12 மணி முதல் 10 மணி வரை கடைகள் செயல்படுகிறது. இந்த நேரம் தவிர கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்டம் மதுவிலக்கு போலீசார்களும் அந்த பகுதி காவல் நிலைய போலீசார்களும் தீவிர சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் கரூர் அரவக்குறிச்சி, லாலாபேட்டை, மாயனூர், தோகைமலை ஆகிய பகுதிகளில் மதுவிலக்கு போலீசார் பல்வேறு பகுதிகளில் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விற்பனை செய்ய முயன்றதாக 9 பேர்கள் மீது வழக்கு பதிந்து அவர்களிடம் இருந்து 59 வாட்டர் பாட்டில்கள் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக கருர் மாவட்டத்தில் பரவலாக மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. சம்பந்தப்பட்ட போலீசர்களும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இந்த நிகழ்வுகளை முற்றிலும் கட்டுப்படுத்த தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.