இளம்பெண் குளித்ததை வீடியோ எடுத்த கும்பல்.. விசாரணையில் தீவிரம் காட்டும் காவல்துறை
அவர்கள் தங்கள் நண்பரின் பிறந்தநாளை அவரது அறையில் கொண்டாட முடியுமா என்று கேட்டனர். முதலில் அந்த பெண் மறுத்தாலும் பின்னர் அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.
![இளம்பெண் குளித்ததை வீடியோ எடுத்த கும்பல்.. விசாரணையில் தீவிரம் காட்டும் காவல்துறை Gurugram: Woman while bathing inside her house group of men recorded and molested இளம்பெண் குளித்ததை வீடியோ எடுத்த கும்பல்.. விசாரணையில் தீவிரம் காட்டும் காவல்துறை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/28/2bf42664ed0fd31fc5d5ff416a96eac9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வீட்டிற்குள் குளித்துக் கொண்டிருந்த இளம்பெண்ணுக்கு ஒரு கும்பல் பாலியல் தொந்தரவு செய்துள்ளது. மேலும், குளிப்பதை வீடியோ எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள பிலாஸ்பூர் பகுதியில், 21 வயது பெண் ஒருவர், அவரது வீட்டில் ஒரு கும்பலால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் அவர் குளிக்கும் போது வீடியோவையும் பதிவு செய்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர். பிலாஸ்பூர் காவல் நிலையத்தில் அந்தப் பெண் கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அக்கம் பக்கத்தைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்று அந்தப் பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். குருகிராமில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் அவர், அருகில் உள்ள கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
அந்த பெண் தனது புகார் மனுவில் நடந்த சம்பவம் முழுவதையும் கூறியுள்ளார். கடந்த வியாழன் இரவு, அவர் அறையில் இருந்ததாக கூறினார். அப்போது அக்கம்பக்கத்தில் இருந்து ஐந்து ஆண்கள் அவரது இடத்திற்கு வந்தனர். அவர்கள் தங்கள் நண்பரின் பிறந்தநாளை அவரது அறையில் கொண்டாட முடியுமா என்று கேட்டனர். முதலில் அந்த பெண் மறுத்தாலும் பின்னர் அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். கொண்டாட்டத்தின்போது, அவருக்கு அழைப்பு வந்தது, பேசுவதற்கு வெளியே சென்றார். பின்னர் உள்ளே வந்து குளிக்கச் சென்றார். இதன்போது, அந்த நபர்கள் அவரை பாலியல் துன்புறுத்தல் செய்து குளிப்பதை வீடியோ எடுத்துள்ளனர். அவர் எச்சரிக்கை செய்ததை தொடர்ந்து, அவர்கள் அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: Crime : காதலில் இருந்து விலகி வேறொருவரை கரம்பிடிக்க முயற்சி.. இளைஞர் செய்த பயங்கரம்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)